மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை
“1008 முறை ஓம் நமச்சிவாய”
சிவநாம அர்ச்சனை
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
மத்திகிரி காடிப்பாளையம்
ஸ்ரீகங்கா பவானி கோயிலில்
மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை
“1008 முறை ஓம் நமச்சிவாய”
சிவநாம அர்ச்சனை
இரவு முழுவதும் பூஜையில்
பங்கேற்ற பக்தர்கள்.
ஒசூர். பிப். 18. –
மத்திகிரி காடி பாளையம்
ஸ்ரீகங்கா பவானி கோயிலில்
மஹா சிவராத்திரி
ஒசூர் மத்திகிரி காடி பளையத்தில்
அமைந்துள்ள ஸ்ரீகங்கா பவானி கோயிலில்
மஹா சிவராத்திரியை முன்னிட்டு
பிப்.15 -ம் தேதியன்று இரவு முழுவதும்
சிவலிங்கத்தின் முன்பு அமர்ந்து
1008 முறை “ஓம் நமச்சிவாய”
சிவ மந்திரத்தை ஜெபித்து
சிவராத்திரி சிறப்பு பூஜையில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்றனர்.
மஹா சிவராத்திரி
ஒவ்வொரு வருடமும்
மாசி மாத க்ருஷ்ண பக்ஷ சதுர்தசியில்
வரும் மஹா சிவராத்திரி விழா.
சிவபெருமானை மையமாக வைத்து
உலகம் முழுவதும்
கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்ரீகங்கா பவானி கோயில்
நடப்பாண்டில் பிப்ரவரி 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று
மஹா சிவராத்திரி முன்னிட்டு
ஒசூர் மத்திகிரி காடிப்பளையத்தில் உள்ள
ஸ்ரீகங்கா பவானி கோயிலில்
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பிப். 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
5.00 மணிக்கு தொடங்கி சிவலிங்கத்தின்
முன்பு அமர்ந்து
வில்வ இலை,
பூக்கள்,
அட்சதைகளை 1008 முறை
ஓம் நமச்சிவாய
சிவமந்திரத்தை ஜெபித்து அர்ச்சித்து
பின்னர் சிவலிங்கத்தின் மேல்
அவர்களே கமர்ப்பணம் செய்தனர்.
நான்கு கால பூஜை
இந்த மந்திர ஜெப பூஜையில்
சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தித்தனர்.
அதன் பிறகு இரவு முழுவதும் நான்கு கால பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு
பக்தி பாடல்கள் பாடியும்,
அபிஷேக ஆராதனையை
கண்டு களித்தனர்.
இந்த மஹா சிவராத்திரி விழா...
ஸ்ரீதயானந்த சரஸ்வதி
சுவாமிகள்
வழிகாட்டுதலில்
ஸ்ரீஓங்காராநந்த
மஹா சுவாமிகள்
தலைமையில் இயங்கும்
“தர்ம ரக்ஷன ஸ்மிதி”
ஒசூர் கிளையின் சார்பாக
அருள்நிதி. JC.வேலுமணி
தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த விழிவில்
ஓசூர் ஆன்மீகவாதி
அருள்நிதி T. ஸ்ரீராஜேந்திரன்
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்விழா சிறப்பாக நடக்க
திரு. ரமேஷ்பாபு ராவ்,
திரு. மஞ்சுநாத்ராவ்(ம)
கோயில் அறங்காவலர்கள் மற்றும்
ஊர் பொதுமக்கள் சிறப்பாக
ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மஹா சிவராத்திரி விழாவில்
பங்கேற்ற அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது.
-----------------------------------.