தொட்டபேளூர் அரசுப்பள்ளி
சமத்துவ பொங்கல் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்,
கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட
தொட்டபேளூர் கிராமம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
சமத்துவ பொங்கல் விழா.
தேன்கனிக்கோட்டை. ஜன. 13. –
சமத்துவ பொங்கல் விழா
தேன்கனிக்கோட்டை வட்டம்,
கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட
தொட்டபேளூர் கிராமத்தில் அமைந்துள்ள
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
ஜனவரி 13-ம் தேதியன்று
சமத்துவ பொங்கல் விழா
மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல் விழா
தலைமை ஆசிரியர்
திரு. K. வெங்கடேசலு.
அவர்கள்
தலைமையில் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில்
அழகிய வண்ணமயமான
கோலமிட்டும்,
வாழைக்கன்று,
கரும்புகள்,
மலர்கள்,
ஆகியவற்றால் அலங்கரித்தும்
புது அடுப்பில் பொங்கல் வைத்து
சமத்துவ பொங்கல் விழா
கொண்டாடப்பட்டது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் ஒன்றிணைந்து
பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
சமத்துவத்தின் அவசியம்
பண்பாட்டு முக்கியத்துவம்
இந்த சமத்துவ பொங்கல் விழாவில்
மாணவர்களிடையே
சமத்துவத்தின் அவசியம்
மற்றும்
பொங்கல் திருநாளின்
பண்பாட்டு முக்கியத்துவம்
குறித்தும்
மாணவ, மாணவிகளுக்கு
எடுத்துரைக்கப்பட்டது.
அனைவருக்கும்
சுவையான பொங்கல்
வழங்கப்பட்டது.
---------------------------------.