கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
சார்பில்
ஓசூர் சுகி ஹோம்ஸ் அறக்கட்டளை
முதியோர் இல்லத்தில்
உடலும்… மனதும்…
கலந்துரையாடல் - விழிப்புணர்வு நிகழ்ச்சி
துணை மேயர் ஆனந்தய்யா
பங்கேற்பு
ஓசூர். அக். 9. -
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
சார்பில்
மத்திகிரி பகுதியில் இயங்கி வரும்
சுகி முதியோர் இல்லத்தில்
உடலும் - மனதும் என்ற தலைப்பில் வயதானவர்களுக்கான கலந்துரையாடல்
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சுகி ஹோம்ஸ் அறக்கட்டளை
முதியோர் இல்லம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மத்திகிரி கூட்டு ரோடு பகுதியில்
சுகி ஹோம்ஸ் அறக்கட்டளை சார்பில்
முதியோர் இல்லம் இயங்கி வருகிறது.
கடந்த 15 ஆண்டு முன்பு தொடங்கப்பட்ட இந்த இல்லம், சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த இல்லத்தில் தற்போது 70-க்கும் அதிகமான வயதானவர்கள் தங்கியுள்ளனர்.
“உடலும் – மனதும்”
இந்த முதியோர் இல்லத்தில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
அக்டோபர் 9-ம் தேதியன்று
“உடலும் – மனதும்” என்ற தலைப்பில்
கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு
சுகி ஹோம்ஸ் அறக்கட்டளை
நிறுவனரும், தலைவருமான
திருமதி. ராஜேஸ்வரி ஆனந்த நாராயண்.
தலைமை வகித்தார்.
ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. ஆறுமுகசாமி
பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக
ஓசூர் மாநகர
துணை மேயர் ஆனந்தய்யா,
ஓசூர் மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை தலைவர்
அரிமா. டாக்டர்.டி.டி. சண்முகவேலு
ஆகியோர் பங்கேற்று
“உடலும் – மனதும்”
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
டாக்டர். சண்முகவேலு பேசியதாவது…
வயதானவர்கள், எப்பொழுதும் உற்சாகமாகவும்,
சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.
காலையில் நடைபயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.
வயதானவர்களுக்கு தூக்கம் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.
இரவு 12 மணி முதல் காலை 4 மணி வரையாவது கண்டிப்பாக தூங்க வேண்டும்.
இரவு 3 மணிக்கு தூங்கி காலை 11 மணிக்கு எழுந்திருக்க வேண்டாம்.
தூங்கி எழுந்தால் தான் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் கழித்து தூங்க வேண்டும்.
இரவு உணவு எளிதாக ஜீரணமாகும் வகையில் இருக்கவேண்டும்.
அளவாக சாப்பிட வேண்டும்.
இரவு படுப்பதற்கு முன் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
வாழைப்பழத்தில்… நார்சத்து, கால்சியம், உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு தூக்கம் கொடுக்கும்.
முருங்கை கீரையில் இறைச்சியை விட அதிகமாக சத்து உள்ளது.
அகத்திக்கீரை உடலை சுத்தப்படுத்தும்.
முருங்கைகீரை மற்றும் அகத்திக்கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
வயதானவர்கள் மதிய உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
நெய் சேர்ப்பதால், சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் ஆகும்.
வயதானவர்களுக்கு தூக்கம் வரவில்லை என்பதே ஒரு வியாதியாக உள்ளது.
ஆகவே சமயம் கிடைக்கும் போதெல்லாம் நன்கு தூங்க வேண்டும்.
இவ்வாறு முதியோர்கள் எப்படி தங்களது உடலையும் மனதையும் பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்து
வயதானவர்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
தொடர்ந்து வயதானவர்களின்
உடல் மற்றும் மனம் சார்ந்த
சந்தேகங்களுக்கு
டாக்டர். சண்முகவேலு
விளக்கமாக பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சியில்
யோகா ஆசிரியை வித்யா,
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
ஒருங்கிணைப்பாளர்
அரிமா. R. ரவிசங்கர்,
திட்ட தலைவர்
மகளிர் அரிமா. சாந்தி சபாபதி,
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா. K. பூபாலன்,
செயலாளர்( சேவை திட்டம்)
அரிமா S. விவேகானந்தன்,
பொருளாளர்
அரிமா Pa. அருண் லோகேஷ்,
முன்னாள் தலைவர்
அரிமா. ரமேஷ்,
அரிமா. சீதாராமன்,
மகளிர் அரிமா. ஸ்ரீவித்யா சீதாராமன்,
மகளிர் அரிமா. அம்முரமேஷ்
மகளிர் அரிமா.மலர் ஆறுமுகசாமி
மற்றும் 50-கும் மேற்பட்ட ஆண், பெண் வயதானவர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.