உலகின் ஏழு புதிய அதிசயங்கள்
சீனப் பெருஞ்சுவர்,
பெட்ரா,
சிச்சென் இட்ஸா,
தாஜ் மஹால்,
மச்சு பிச்சு,
கிறிஸ்து ரிடீமர் சிலை,
கொலோசியம்.
ஜூலை – 7 -2007_
7 புதிய உலக அதிசயங்கள்
அறிவிக்கப்பட்ட நாள்!
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜுலை. 7. -
உலகின் 7 அதிசயங்களின் பட்டியல் கிமு 2 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதால், மிகவும் பழமையான பட்டியலாகக் கருதப்பட்டது.
எனவே, சுவிஸ் அறக்கட்டளை நியூ 7 வொண்டர்ஸ் உலகின் புதிய ஏழு அதிசயங்களைத் தீர்மானிக்க ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது.
சுவிஸ் அறக்கட்டளை
2000 ஆம் ஆண்டில், சுவிஸ் அறக்கட்டளை
நியூ 7 வொண்டர்ஸ்,
உலகின் புதிய ஏழு அதிசயங்களைத் தீர்மானிக்க ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது.
கிமு 2 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட 7 உலக அதிகயங்கள் பட்டியலில் இருந்து கிசாவின் பிரமிடுகள் மட்டுமே புதிய உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெற்றன.
100 மில்லியன் வாக்குகள்
எனவே, உலகின் ஏழு புதிய அதிசயங்களாக எந்த இடங்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களோ, அதற்கு வாக்களிக்கும்படி கேட்கப்பட்டது. இதையொட்டி,100 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் இணையத்தில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் பதிவாகின.
அதன் இறுதி முடிவுகள், ஜூலை 7, 2007 அன்று அறிவிக்கப்பட்டது. அந்த முடிவுகள் படி
புதிய 7 உலக அதிசயங்கள்
பட்டியல் இங்கே!
சீனப் பெருஞ்சுவர்
தி கிரேட் வால் ஆஃப் சைனா என்று அழைக்கப்படும் சீனப் பெருஞ்சுவர், உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் ஒன்றாகும்.
இதன் நீளம் 8850 கிலோமீட்டர்கள் ஆகும்.
இதற்கு இணையான சுவர்களின் கட்டுமானப் பணி, கிமு 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்தது.
பெட்ரா
உலகின் பண்டைய நகரங்களில் ஒன்று, பெட்ரா. இது, ஜோர்டானில் உள்ள ஒரு தொலைதூர பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் மணற்கல்லால் ஆன மலைகள் மற்றும் குன்றின் மத்தியில் அமைந்துள்ளது.
மோசஸ் ஒரு பாறையைத் உடைத்து, தண்ணீர் வெளியேற்றிய இடங்களில் இதுவும் ஒன்று என்று நம்பப்படுகிறது.
நபாடேயர்கள் என்ற அரபு பழங்குடி இனம், இந்த இடத்தை தங்கள் தலைநகராக மாற்றினர்.
பின்னர், அது செழித்து, ஒரு முக்கியமான வர்த்தக மையமாக மாறியது. குறிப்பாக மசாலாப் பொருட்கள் வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான இடமாக திகழ்ந்தது.
சிச்சென் இட்ஸா
மெக்ஸிகோவின் யுகடான் தீபகற்பத்தில் உள்ள மாயன் நகரம் சிச்சென் இட்ஸா.
இந்த நகரம் கி.பி 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் செழிப்பாக இருந்தது.
மாயன் பழங்குடி இட்ஸாவின் தலைமையில், பல முக்கியமான நினைவுச்சின்னங்களும் கோயில்களும் கட்டப்பட்டன.
தாஜ் மஹால்
காதல் சின்னமாக உலக அளவில் கொண்டாடப்படும் தாஜ்மகால், கட்டிடக் கலையிலும் முதன்மையாக விளங்குகிறது. முகலாயக் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று தாஜ்மகால்.
பேரரசர் ஷாஜஹான் (1628–58 ஆம் ஆண்டு ஆட்சி) அவரது காதல் மனைவி மும்தாஜ் மஹாலை கவுரவிப்பதற்காக கட்டிய நினைவுச் சின்னம்.
மச்சு பிச்சு
மச்சு பிச்சு மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளம், பெரு நாட்டில் உள்ளது.
இது குஸ்கோவிற்கு அருகிலுள்ள ஒரு இன்கான் தளம் ஆகும். இந்த இடம் ஆண்டிஸ் மலைகளில் அமைந்துள்ள சில முக்கிய கொலம்பிய இடிபாடுகளில் ஒன்றாகும்.
இந்த இடத்தில் விவசாய நிலங்கள், பிளாசாக்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கோயில்கள் ஆகியன உள்ளன.
கிறிஸ்து ரிடீமர் சிலை
இயேசுவின் மிகவும் பிரம்மாண்ட இந்த சிலை கோர்கோவாடோ மலையில் கட்டப்பட்டுள்ளது.
இது பிரேசிலில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது.
1926 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போருக்குப் பிறகு தொடங்கிய இந்த கட்டுமானப் பணியை முடிக்க, ஐந்து ஆண்டுகள் ஆனது.
கொலோசியம்
ரோமில் உள்ள கொலோசியம் மிகவும் பிரபலமான இடம்.
கொலோசியம் முதல் நூற்றாண்டில் வெஸ்பேசியன் பேரரசரின் ஆணைப்படி கட்டப்பட்டது.
-----------------------------------------------.