தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில்
சமத்துவ பொங்கல் விழா
கொண்டாட்டம்
ஓசூர். ஜனவரி. 13. –
திருக்குறள்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு
பேரூராட்சி தலைவர்
சீனிவாசன்
தலைமை வகித்தார்.
துணைத் தலைவர்
அப்துல் கலாம்
முன்னிலை வகித்தார்.
இதில் கவுன்சிலர் அப்துல் ரகுமான்,
முகமது ஷரீப்,
அனைத்து பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டு
சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினர்.
சமத்துவ பொங்கல்
சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு
பேரூராட்சி அலுவலகம் முன்பு அழகிய வண்ணமயமான கோலமிட்டு,
சுற்றிலும் கரும்புடன்
புதுஅடுப்பில், புதுப்பானையில்
இனிப்பு பொங்கல் செய்து, கடவுளை வணங்கி, அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கி,
பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
பேரூராட்சி தலைவர் சீனிவாசன்
பேசும்போது,
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
அதே போல் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்கள் பகுதி வளர்ச்சிக்காக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். வளர்ச்சிப் பணிகளை உடனுக்கு உடன் செய்து தருவோம் என்று கூறினார்.
மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், ஆடு மாடுகள் வளர்ச்சி பெற வேண்டும். நல்ல மழை பெய்ய வேண்டும். விவசாயிகள் சுபிட்சமாக வாழ வேண்டும். என்றும் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதில் கவுன்சிலர்கள் நாகலட்சுமி. சுமதி, ரிஹன பேகம், நஜிமா, முனீர், பி.மணிவண்ணன், லிங்கோஜி ராவ், பிரேமா, சஞ்சனா, கவுரம்மா, ஜெயகாந்த், ஸ்ரீதர், பேரூராட்சி அலுவலர் தேவராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.