கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
குடியரசு தினவிழா
76-வது குடியரசு தினவிழா
கொண்டாட்டம்
தேசிய கொடி ஏற்றி வைத்து
மரியாதை செலுத்திய
மேயர் எஸ்.ஏ. சத்யா
ஓசூர். ஜனவரி. 26. –
76-வது குடியரசு தினவிழா
ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் இந்திய நாட்டின் 76-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர், 2019-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஓசூர் மாநகராட்சியின்
முதல் மேயர் எஸ்.ஏ.சத்யா
2022-ம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஓசூர் மாநகராட்சியின்
முதல் மேயராக எஸ்.ஏ.சத்யா பதவியேற்று பணியாற்றி வருகிறார்.
அவர் மேயராக பதவியேற்ற பிறகு
ஓசூர் மாநகராட்சியின்
மேம்பாட்டுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
அதில் குறிப்பாக
பாதாள சாக்கடை திட்டம்.
ஓசூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்.
ரூ.568 கோடி மதிப்பில், தொடங்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
ராமநாயக்கன் ஏரி சீரமைப்பு திட்டம்
அதேபோல ரூ.24.31 கோடி மதிப்பில் ஓசூர் ராமநாயக்கன் ஏரியை சீரமைத்து மேம்படுத்தும் திட்டம் நடைபெற்று வருகிறது.
புதிய பேருந்து நிலையம்
மேலும் ஓசூர் மாநகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ரூ.52 கோடி மதிப்பில் பத்தலப்பள்ளி அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சிக்கு சொந்தமான
ரூ.500 கோடி
மதிப்புள்ள இடங்கள் மீட்பு
மேலும் ஓசூர் சீதாராம் மேடு, நரசிம்மா காலனி,கிராண்ட் சினிமா பின்புறம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஓசூர் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆகிய பல்வேறு வளர்ச்சிப்பணி திட்டங்கள் ஓசூர் மாநகராட்சியில் நடைபெற்று வருகிறது.
குடியரசு தினவிழா
கொடியேற்றம்
இந்நிலையில்
ஓசூர் மாநகராட்சியில் 2025-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி 76-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேயர் எஸ்.ஏ.சத்யா
ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு
நடைபெற்ற நிகழ்வில் மாநகர மேயர்
எஸ்.ஏ.சத்யா பங்கேற்று,
தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து சிறப்புரையாற்றினார்.
மாணவர்களுக்கு பாராட்டு
ஒசூர் மாநகராட்சியில் உள்ள அரசுப்பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேயர், சான்றிதழ்களை வழங்கி
பாராட்டினார்.
சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி
ஊழியர்கள் கவுரவிப்பு
அதனைதொடர்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பின்னர் அரசுப்பள்ளி மாணவர்களின் பேச்சுப்போட்டி, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த விழாவில் துணை மேயர் ஆனந்தய்யா, நிதி மற்றும் வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா,
மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------