கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
தமிழ்நாடு பிராமண சங்கம்
சார்பில்
நவராத்திரி – விஜயதசமி முன்னிட்டு
கன்யா பூஜை
19 பெண் குழந்தைகள் பங்கேற்பு
ஒசூர். அக். 3. -
தமிழ்நாடு பிராமண சங்கம்,
தாம்ப்ராஸ்
ஓசூர் கிளை (தாம்ப்ராஸ்) சார்பில்
அக்டோபர் 2-ம் தேதி அன்று
நவராத்திரி - விஜயதசமி
முன்னிட்டு 19 கன்யா குழந்தைகள் பங்கு பெற்ற கன்யா பூஜை நடத்தப்பட்டது.
கன்யா பூஜை
ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ
100 அடி சாலையில் உள்ள
ஸ்ரீதேவி பூதேவி உடனுறை
லட்சுமி நாராயண சுவாமி
கோவிலில்
உலக நன்மையை வேண்டியும்
நம்முடைய இந்து கலாச்சாரங்களை
அடுத்த தலைமுறைக்கு
எடுத்துச் செல்வதற்காகவும்
கன்யா பூஜை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில்
19 பெண் குழந்தைகள்,
வண்ணமயமான பட்டாடை
அணிந்து கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் மாலை அணிவித்து கன்யா பூஜை நடத்தப்பட்டது.
அம்பிகை
நவராத்திரி என்றாலே அம்பிகையை வழிபடுகிறோம்.
கன்யா குழந்தைகளை அம்பிகையாக பாவித்து இந்த இரண்டாம் ஆண்டு கன்யா பூஜை நடத்தப்பட்டதாக
தாம்ப்ராஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஓசூர் கிளை தலைவர்
திரு. நாகராஜன்
தலைமையில்
மகளிர் அணி தலைவி
திருமதி. ரோகிணி கணேஷ்
ஆகியோர் ஒருங்கிணைத்து
இந்த சிறப்பு பூஜையை
ஏற்பாடு செய்திருந்தார்கள்.
-----------------------------------------.