குழந்தைகள் தினவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
முன்னாள் மாணவரும்
ஓசூர் மாநகராட்சி
சுகாதாரக் குழு தலைவருமான
திரு. என்.எஸ். மாதேஸ்வரன்
பங்கேற்பு
ஓசூர். நவ. 14. –
குழந்தைகள் தினவிழா
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
ஆர்.வி. அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
குழந்தைகள் தின விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
முன்னாள் பாரதப் பிரதமர்
ஜவகர்லால் நேரு
அவர்களின் பிறந்த நாளான நவ. 14-ம் தேதி - குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2025 – ம் ஆண்டு நவ. 14-ம் தேதியன்று
குழந்தைகள் தினவிழா
ஓசூர் – ராயக்கோட்டை சாலையில்
இயங்கி வரும் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு
காலையிலிருந்து மாலை வரை
பள்ளிக் குழந்தைகளின்
நாட்டியம்
உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அறுசுவை விருந்து
மதியம் மாணவர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.
மாலையில் நடந்த குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சிக்கு
தலைமை ஆசிரியர்
டாக்டர். வளர்மதி
தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
திரு. என். செந்தில்குமார்
அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக
முன்னாள் மாணவரும் -
ஓசூர் மாநகராட்சி
சுகாதாரக் குழு தலைவருமான
திரு. என்.எஸ். மாதேஸ்வரன்
கலந்து கொண்டு
பள்ளி மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கி
சிறப்புரையாற்றினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர்
திரு. சக்திவேல்
மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள்
மாணவச் செல்வங்கள்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை
சிறப்பித்தனர்.
இறுதியில்
துணை தலைமை ஆசிரியர்
திரு. ரமேஷ்
நன்றி கூறினார்.