நீர் வழி போக்குவரத்துக்கு
முக்கிய ஆதாரமான
நீராவி படகு
ஜனவரி -10 –
முதல் நீராவிப்படகு
அதிக பயணம் செய்த தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்
ஓசூர். ஜனவரி. 10. –
ஜான் ஃபிட்ச்
ஜான் ஃபிட்ச் என்ற அமெரிக்கப் பொறியாளர்
1787 – ஆம் ஆண்டில் முதல் நீராவி கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்து இயக்கினார்.
அதன் தொடர்ச்சியாக
1812-ம் ஆண்டு ஜனவரி 10-ஆம் நாள்
மிசிசிப்பி நதியில் முதல் நீராவிப்படகு
பிட்ஸ்பர்க்கில் இருந்து புறப்பட்டு தொடர்ச்சியாக 82
நாட்கள் பயணித்து நியூ ஆர்லியன்ஸ்ஸை சென்றடைந்தது.
துடுப்பு சக்கர நீராவி படகு
நீராவி படகு என்பது நீராவி மூலம் இயக்கப்படுவது. 19-ஆம் நூற்றாண்டில் குறுகலான ஆழமற்ற ஆறுகளில், துடுப்பு சக்கர நீராவி படகு பெருவாரியாக இயக்கப்பட்டது.
1814-ஆம் ஆண்டில் நியூ ஆர்லியன்ஸில் 20 நீராவிப்படகுகளை வடிவமைத்து இயக்கினார்.
20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1,200ஐ எட்டியது. நீராவி படகுகளின் முக்கிய சரக்குகள் பருத்தி மற்றும் சர்க்கரை இருந்தன. இத்துடன் பயணிகளும் பயணித்தனர்.
பிற்காலங்களில்
நியூகோமன் நீராவி இயந்திரம்,
சுழலும் இயக்க நீராவி இயந்திரம்,
உயர் அழுத்த நீராவி இயந்திரம்,
கலவை நீராவி இயந்திரம்,
நீராவி விசையாழி,
என்று பல மேம்பாடுகளில் நீராவிப் படகுகள் பரிணமித்தன.
ராபர்ட் ஃபுல்டன்
அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ராபர்ட் ஃபுல்டனின்
காப்புரிமை பெற்ற நீராவி கப்பல், அடுத்த நூற்றாண்டில் முக்கிய நீர் போக்குவரத்து ஆனது.
எனவே ராபர்ட் ஃபுல்டன் “நீராவியின் தந்தை” என அழைக்கப்பட்டார்.
1839 - ஆம் ஆண்டு வரை நீராவிப் படகுகள் தண்ணீரில் நகர்ந்து பக்கவாட்டில் உள்ள பெரிய சக்கரங்களுக்கு விசையாழிகளில் இருந்து வரும் நீராவியில் இருந்து சுழன்றன.
பிரான்சிஸ் ஸ்மித்
ஆங்கில கண்டுபிடிப்பாளர் பிரான்சிஸ் ஸ்மித்தால் கட்டப்பட்ட தனது முதல் திருகு நிராவி கப்பலுக்கு
ஆர்க்கிமிடிஸ் என்று பெயர் கூட்டினார்.