சூளகிரி மேற்கு ஒன்றியம்
அதிமுக சார்பில்
புரட்சித்தலைவி அம்மா
ஜெயலலிதா நினைவு நாள்
அஞ்சலி
ஓசூர். டிச. 05. –
சூளகிரி அதிமுக மேற்கு ஒன்றியம்
சார்பில் நடந்த புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா நினைவு நாள் அஞ்சலி நிகழ்வில்
தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனஹள்ளி
சட்டப்பேரவை தொகுதி, சூளகிரி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் அத்திமுகம் பேருந்து நிலையத்தில் புரட்சித் தலைவி அம்மா நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர்,
மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும்
திட்டக்குழு உறுப்பினர்
வெங்கடாசலம் பாபு
இந்த நிகழ்வில் சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் திட்டக்குழு உறுப்பினர் வெங்கடாசலம் பாபு தலைமை வகித்து,
புரட்சித்தலைவி அம்மா திருவுருவப்
படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அத்திமுகம் ஊராட்சிமன்ற தலைவர்,
புரட்சித்தலைவி அம்மா பேரவை
செயலாளர் எஸ்.சுரேஷ், சூளகிரி மேற்கு
ஒன்றிய பொருளாளர் நாராயணப்பா,
செட்டிபள்ளி முன்னாள் ஊராட்சிமன்ற
தலைவர் பாபு, மென்ஷன்தட்டி முன்னாள்
ஊராட்சி மன்ற தலைவர் நாகேஷ்,
மாவட்ட பிரதிநிதி நாகேஷ்,
மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணா,
அண்ணா தொழிற்சங்க ஒன்றிய தலைவர்
அசோக், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய
நிர்வாகி அஸ்மதுல்லா,
கிளை செயலாளர்கள்
சதாசிவம், மூர்த்தி, கொன்னப்பண்ணா,
ரமேஷ், கடத்தூர் சம்பத், ஸ்ரீநிவாஸ்,
அமரேஷ், ஸ்ரீகாந்த், முனிராஜ் நரசிபுரம்,
வினைய், கிரியப்பா, சசிகுமார், சுப்பிரமணி,
மற்றும் புரட்சித் தலைவியின் பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்து பிரிவு,
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை, கழக
செயலாளர்கள், நிர்வாகிகள், கூட்டுறவு சங்க
நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,
ஊராட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள்,
அனைவரும் கலந்து கொண்டனர்.
கழகப் பொதுச்செயலாளர்,
முன்னாள் முதலமைச்சர்,
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்
எடப்பாடி பழனிசாமி
ஆணைக்கிணங்க
கழக துணை பொதுச்செயலாளர், முன்னாள் எம்.பி,
முன்னாள் அமைச்சர்,
வேப்பனஹள்ளி எம்எல்ஏ
எங்கள் அரசியல் ஆசான், எங்கள் அரசியல் வழிகாட்டி, கே.பி. முனுசாமி வழிகாட்டுதலின்படி
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா
தமிழக மக்களின் உரிமைக்காகவும்,
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்தவும், தன் இறுதி மூச்சு உள்ளவரை
பாடுபட்டவர்,
மக்களால் நான், மக்களுக்காகவே நான்”
என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து
காட்டிய ஒப்பற்ற மக்கள் தலைவி
நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும், எந்நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
“பொன்மனச்செம்மல்” புரட்சித்தலைவர்
வகுத்துக் கொடுத்த பாதையில் அடிபிறழாமல்
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா கடைபிடித்து வந்த ஒப்பற்ற கொள்கைகளை பின்பற்றி அதே வழியில் நாமும் தொடர்ந்து பயணித்திட அவரது நினைவு நாளில் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தி மக்கள் பணியாற்றி 2026-ல் புரட்சித் தமிழர்
எடப்பாடியார் தலைமையில் நமது கழக ஆட்சி அமைந்திட அயராது உழைக்க சபதம் ஏற்போம். என்று அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.