நவீன முதனியியல் துறையில் நன்கு அறியப்பட்டவர் -
ஒராங்குட்டான் பற்றிய ஆய்வில் முதன்மையானவர் –
ஆய்வாளர்
பிருட்டே கால்டிகாசு
மே – 10 -1946 -
முதனியியல் பற்றி ஆய்வு செய்யும்
ஜெர்மனி ஆய்வாளர்
பிருட்டே கால்டிகாசு
79- வது பிறந்ததினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 10. –
பிருட்டே கால்டிகாசு
(Biruté Marija Filomena Galdikas)
(பிறப்பு : மே10, 1946 ஜெர்மனி)
முதனியியல் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர் ஆவார்.
நவீன முதனியியல் துறையில் நன்கு அறியப்பட்டவரான இவர்,
ஒராங்குட்டான் பற்றிய ஆய்வில் முதன்மையானவர் ஆவார். மேலும் இவர் ஒராங்குட்டான்களைப் பற்றி பல நூல்களும் எழுதியுள்ளார்.
முதனியியல் (Primatology)
முதனியியல் அல்லது முதனிலை விலங்கியல் என்பது முதல் நிலை விலங்குகளைப் பற்றி ஆயும் துறையாகும்.
இத்துறை சார்ந்த வல்லுனர்களை
உயிரியல்,
மானிடவியல்,
உளவியல்
மற்றும் பல துறைகளில் காணமுடியும்.
இத்துறை, ஓமோ பேரினத்தை, சிறப்பாக ஓமோ சப்பியன்களை இயற்பிய மானிடவியலின் ஒரு கிளைத்துறை ஆகும்.
மனிதக்குரங்கு
இத்துறை மனித இன மூதாதைகளான மனிதக் குரங்குகளை ஒத்த இனங்களை ஆய்வு செய்யும் துறையுடனும் பொதுவான ஆய்வுப்பரப்பைக் கொண்டுள்ளது.
தற்கால முதனியியல் பெருமளவு பல்வகைமைத் தன்மை கொண்ட ஒரு அறிவியல்.
இது, முதனிலை விலங்கு மூதாதைகளின் உடற்கூற்றியல் ஆய்வுகள், முதனிலை விலங்குகளை அவற்றின் வாழிடங்களில் கவனித்துச் செய்யும் கள ஆய்வு, விலங்கு உளவியல் சோதனைகள், மனிதக்குரங்கு மொழி போன்ற பலவற்றை உள்ளடக்குகின்றது.
இவ்வாய்வுகள், மனிதனுடைய அடிப்படை நடத்தைகள், அவற்றின் தொன்மையான மூலங்கள் தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
ஒராங்குட்டான்
ஒராங்குட்டான்
அல்லது
ஓராங் ஊத்தான் (Orang Hutan)
என்பது மனிதக் குரங்குகளில்
உள்ள ஓர் ஆசிய இனம் ஆகும்.
இவற்றின் உடல் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மற்ற மனிதக் குரங்குகளுடன் ஒப்பிடுகையில் நீண்ட கைகளைக் கொண்டிருக்கும்.
இவை உயிரினங்களில் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் உள்ள ஓரினமாகும்.
இவை கிப்பன்களைப் போல நேராக நிமிர்ந்து நடப்பவை.
இவற்றின் உடல்சார்ந்த தோற்றம்,
நடத்தை சார்ந்த செயற்பாடுகள்,
மற்றும் தொல்லுயிர் எச்ச ஆய்வுகள் மூலமாக,
இவை மனிதருக்கு மிக நெருக்கமாக இருப்பதைக் காட்டுகின்றன.
இந்த இனம் தோன்றிய இடம்
இந்தோனேசியா, மலேசியாவாக இருந்த போதிலும்,
இதன் தற்போதைய வாழிடம்
சுமாத்திரா, போர்னியோப் பகுதிகளில் உள்ள மழைக்காடுகள் ஆகும்.
ஆனாலும், ஜாவா, தீபகற்ப மலேசியா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் இவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன.
பிருட்டே கால்டிகாசு
இளவயது முதலே இயற்கை, மனிதத் தோற்றம் பற்றி ஆர்வம் கொண்டிருந்த கால்டிகாசு, உயிரியல், உளவியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்தார்.
பின்னர் மானிடவியல் (Anthropology) பற்றிய முதுகலைப்படிப்பின் போது புகழ்பெற்ற தொல்லுயிர் ஆய்வாளரான முனைவர். லூயிசு லீக்கியைச் சந்தித்தார்.
பின்னர்
லீக்கி நேசனல்
சியாகிரபிக் சொசைட்டி
என்ற அமைப்பின் உதவியுடன் ஒராங்குட்டான்களைப் பற்றி ஆராய போர்னியோவில் ஒரு ஆய்வுக்கூடத்தை நிறுவ கால்டிகாசுக்கு உதவினார்.
இவர் 34 ஆண்டுகள் காடுகளில் ஒராங்குட்டான்களைப் பற்றி கூர்ந்து ஆராய்ந்திருக்கிறார்.
கால்டிகாசு தற்போது பிரிட்டிசு கொலம்பியாவில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார்.
கால்டிகாசும் முதனியியல் துறையில் லீக்கி அவர்களின் கீழ் ஆய்வு செய்த மற்ற இரு பெண்களான
சேன் குட்டால், மற்றும் டயான் வாசி ஆகியோரும் தற்காலத்தில் லீக்கியின் தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
------------------------------------.