ஜுஜுவாடி 2-வது வார்டு
அரசு மேல்நிலைப்பள்ளியில்
மாவட்டத்திலேயே
முதல்முறையாக
ரோபோடிக் ஆய்வகம் திறப்பு
மாமன்ற கல்விக்குழு
தலைவருக்கு பாராட்டு
ஓசூர். நவ. 28. –
by Jothi Ravisugumar
ரோபோடிக் ஆய்வகம்
மாவட்டத்திலேயே முதல் முறையாக
ஓசூர் ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் திறனை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் வெப்டெக் தனியார் நிறுவனம் மூலமாக ரோபோடிக் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஜுஜுவாடியை சுற்றியுள்ள சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர்.
2-வது வார்டு கவுன்சிலரும், மாமன்ற கல்விக்குழு தலைவர் ஸ்ரீதர்,
இந்த அரசுப்பள்ளியின் வளர்ச்சிக்கும், இங்கு பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், 2-வது வார்டு கவுன்சிலரும், மாமன்ற கல்விக்குழு தலைவருமான ஸ்ரீதர், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்
கொத்தகொண்டப்பள்ளி வெப்டெக் நிறுவனம்
குறிப்பாக இவர், இந்த அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய தொழிலாளர் குடுபத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடையே நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, அவர்களிடம் உள்ள திறனை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில், கொத்தகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் வெப்டெக் என்ற தனியார் நிறுவனத்தை அணுகி, ஜுஜுவாடி அரசுப்பள்ளியில் ரோபோடிக் லேப் அமைக்க உதவி கோரினார்.
அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வெப்டெக் நிறுவனத்தினர், பல லட்சம் ரூபாய் மதிப்பில் ரோபோடிக் லேப் அமைத்து கொடுத்துள்ளனர்.
ரோபோடிக் பொறியாளர்
இந்த ரோபோடிக் ஆய்வகத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரோபோடிக் பொறியாளர் மற்றும் பயிற்சியாளர் திவ்யா, அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெப்டெக் நிறுவன சிஎஸ்ஆர் தலைவர் ராஜேஷ் ரஞ்ஜன்
இந்த ரோபோடிக் ஆய்வகத்தை நேரில் பார்வையிட்டு பரிசீலிக்க டெல்லியில் இருந்து வெப்டெக் நிறுவன சிஎஸ்ஆர் தலைவர் ராஜேஷ் ரஞ்ஜன் வருகை தந்தார்.
ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறுவப்பட்டுள்ள ரோபோடிக் ஆய்வகத்தை பார்வையிட்டார்.
அப்போது பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் உருவாக்கிய அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் வாழ்க்கையை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வடிவமைக்கப்பட்ட புதுமையான, ஆக்கப்பூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டார். மேலும் மாநிலம் முழுவதும் நடைபெற்ற திட்ட கண்காட்சியில் பெற்ற சான்றிதழ்களையும், மாணவர்களின் திறனையும் நேரில் கண்டு பாராட்டினார்.
மாமன்ற கல்விக் குழு
தலைவருக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளிலேயே ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் முதல் முறையாக ரோபோடிக் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சி எடுத்த ஓசூர் மாநகராட்சியின் 2-வது வார்டு
கவுன்சிலரும், மாமன்ற கல்விக் குழு தலைவருமான ஸ்ரீதரை டெல்லி வெப்டெக் சிஎஸ்ஆர் தலைவர் ராஜேஷ் ரஞ்ஜன் பாராட்டினார். தொடர்ந்து ரோபோடிக் பொறியாளர் மற்றும் பயிற்சியாளர் திவ்யாவை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அப்போது
இந்தியா ஸ்டெம் பவுண்டேஷன் மேலாளர் டேனிஷ் வாசிம், தலைமையாசிரியர் நர்மதாதேவி உடனிருந்தனர்.
வெப்டெக் அதிகாரிகளுடன் ரோபோடிக் ஆய்வகத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பேச்சுப்போட்டியில் முதலிடம்
முதலமைச்சர் பாராட்டி பரிசு
ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில்
படித்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி மாநில அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் முதல் பரிசு வென்றார். இவரை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டி பரிசு அளித்தார்.