ஓசூர் அக்ஷயா ஜோதிட வித்யாலயம்
ஆன்மிக சுற்றுலாவில்
சூரியனார் கோயில்(சூரியன்),
திங்களுர்(சந்திரன்),
வைத்தீஸ்வரன் கோயில்(செவ்வாய்),
திருவெண்காடு(புதன்),
ஆலங்குடி(குரு),
கஞ்சனூர்(சுக்கிரன்),
திருநாகேஸ்வரம்(ராகு),
கீழ்பெரும்பள்ளம்(கேது),
திருநள்ளாறு(சனி)
நவகிரக தரிசனம்
ஓசூர் அக்ஷயா ஜோதிட வித்யாலயம்
சார்பில் இரண்டு நாள்
ஆன்மிக சுற்றுலா பயணம்
குருபெயர்ச்சி நாளில்
நவகிரக ஸ்தலங்களை தரிசித்த
ஓசூர் பக்தர்கள்
ஓசூர். மே. 14. –
ஓசூர் அக்ஷயா
ஜோதிட வித்யாலயம்
சார்பில் மேற்கொண்ட இரண்டு நாள் ஆன்மிக சுற்றுலா பயணத்தில்
35 பக்தர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நவகிரக ஸ்தலங்களை தரிசித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
நட்சத்திர ஹோம்ஸ் குடியிருப்பு பகுதியில் அக்ஷயா ஜோதிட வித்யாலம் இயங்கி வருகிறது.
இந்த ஜோதிட வித்யாலயம் மூலமாக ஜோதிட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அக்ஷயா ஜோதிட வித்யாலம் மற்றும் பயிற்சி வகுப்புகளை நிறுவனர்
திரு. ராஜாராம்,
திருமதி சாந்திராஜாராம்,
ஆகியோர் சிறப்பாக
நடத்தி வருகின்றனர்.
இந்த அக்ஷயா ஜோதிட வித்யாலம் சார்பில் ஆண்டுதோறும் ஆன்மிக சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச்செல்லப்படுகிறார்கள்.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆன்மிக சுற்றுலா
நடப்பாண்டில் மே மாதம் 11-ம் தேதியன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு அக்ஷயா ஜோதிட வித்யாலம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நவகிரக ஸ்தலங்களுக்கு சென்று வர ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
35 பக்தர்கள்
இந்த சுற்றுலாவுக்கு திரு.ராஜாராம், திருமதி சாந்தி ராஜாராம் ஆகியோர் வழிகாட்டியாக இருந்து அழைத்துச் சென்றனர்.
ஆன்மிக சுற்றுலாவில் 35 பக்தர்கள் பங்கேற்றனர்.
திங்களுர் கைலாசநாதர்
இந்த ஆன்மிக சுற்றுலா பயணத்தில் பக்தர்கள் ஓசூரில் இருந்து சனிக்கிழமை மாலை புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை கும்பகோணம் சென்றடைந்தனர்.
பின்பு முதல் நிகழ்வாக
திங்களுர் அருள்மிகு கைலாசநாத சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.
இந்த கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் பெற்றனர்.
ஆலங்குடி
ஆபத்சஹாயேஸ்வரர்
குருபெயர்ச்சி நாளான பதினொன்றாம் தேதியன்று ஆலங்குடி ஆபத்சஹாயேஸ்வரர் குரு பகவான் கோயிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அனைவரும் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து சுவாமியை தரிசித்து மகிழ்ந்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த ஆன்மிக சுற்றுலாவில்
சூரியனார் கோயில்(சூரியன்),
திங்களுர்(சந்திரன்),
வைத்தீஸ்வரன் கோயில்(செவ்வாய்),
திருவெண்காடு(புதன்),
ஆலங்குடி(குரு),
கஞ்சனூர்(சுக்கிரன்),
திருநாகேஸ்வரம்(ராகு),
கீழ்பெரும்பள்ளம்(கேது),
திருநள்ளாறு(சனி)
ஆகிய நவகிரக ஸ்தலங்களுக்கும் சென்று பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திங்களுர் மங்கள மாருதி தேவஸ்தானம்,
சுவாமிமலை பட்டீஸ்வரம் திருநள்ளாறு
கும்பேஸ்வரர் சாரங்கபாணி ஆலயம் ஆகிய திருத்தலங்களுக்கு சென்று சிறப்பாக சுவாமி தரிசனம் செய்து சுவாமியின் அருள் பெற்றனர்.
அறுசுவை உணவு
ஆன்மிக சுற்றுலாவில்
பங்கேற்ற 35 ஆன்மிக அன்பர்களுக்கும்
அறுசுவை உணவு மற்றும் தங்குமிடம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஓசூரைச் சேர்ந்த
திரு. பட்டாபிராமன்
அவர்கள், அறுசுவை உணவு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
அவருக்கு அக்ஷயா ஜோதிட வித்யாலயம் மற்றும் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த ஆன்மிக சுற்றுலாவில்
சென்னை தினகரன்
நாளிதழ் ஆசிரியர்
திரு. விஷ்ணுதாசன்
அவர்கள், தனது குடும்பத்தாருடன் பங்கேற்று நவகிரக திருத்தலங்களை தரிசித்தார்.
இந்த இரண்டு நாள் ஆன்மிக சுற்றுலாவை
இனிதே நிறைவு செய்த பக்தர்கள்,
மே 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை
காலை ஓசூர் நகருக்கு திரும்பினர்.
இந்த ஆன்மிக சுற்றுலா மூலமாக
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நவகிரக ஸ்தலங்களுக்கு அழைத்துச்சென்று சிறப்பான தரிசனம் பெறச் செய்த ஓசூர் அக்ஷயா ஜோதிட வித்யாலயம் நிறுவனர் ராஜாராம்,
திருமதி. சாந்திராஜாராம் ஆகியோரை பக்தர்கள் பாராட்டினார்கள்.
திருநள்ளாறு கோயில்
----------------------------------------------------------------------------------------------.
ஓசூர் அக்ஷயா ஜோதிட வித்யாலயத்தில்
ஜோதிட பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில்
கற்றுத்தரப்படுகிறது.
ஜோதிட பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள்
கீழ்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொள்ள
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செல்போன் - 94420 35993
செல்போன் - 94876 84401