கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை தலைமை காவலர் மகள் –
பிளஸ் – 2 மாணவி பத்மஸ்ரீ
உலக சிலம்பம் போட்டியில்
தங்கப்பதக்கம் வென்று சாதனை
ஓசூர். நவ. 9. –
சர்வதேச சிலம்பம் போட்டி
தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலரின் மகள் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை
தலைமை காவலர் மகள்
சேலம் மாவட்டம் கொங்குபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் பத்மஸ்ரீ, கிருஷ்ணகிரியில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
மாணவி பத்மஸ்ரீ 7 வயதில் இருந்தே சிலம்பம் கற்று வருகிறார்.
சிலம்பம் தற்காப்பு கலையில் நன்கு பயிற்சி பெற்றுள்ள இவர், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வருகிறார்.
முதல்வர் கோப்பை - தங்கம்
மாணவி பத்மஸ்ரீ,
மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அதேபோல மாநில அளவிலான போட்டி மற்றும்
கேரளா மாநிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம்
நடந்த தேசிய அளவிலான சிலம்பம்
போட்டியிலும் பங்கேற்று
தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
50 தங்கப்பதக்கம்
இதுவரை மொத்தம் 50 க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக சிலம்பம் போட்டி - தங்கம்
நேபாள நாட்டில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடந்த உலக அளவிலான சிலம்பம் போட்டியில் சீனியர் பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும், பெருமைசேர்த்த மாணவி பத்மஸ்ரீ -க்கு அவரது பெற்றோர், காவலர்கள், விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
--------------------------------------.