தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
ஓசூர் காவேரி மருத்துவமனை
இணைந்து நடத்திய
பள்ளி மற்றும் கல்லூரி
வாகன ஓட்டுனர்களுக்கு
இலவச கண் சிகிச்சை முகாம்
200 ஓட்டுனர்கள் பங்கேற்பு
ஓசூர். ஜனவரி. 13. –
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின்
சாலை பாதுகாப்பு மாதம்(01.01.25 முதல் 31.01.25வரை) முன்னிட்டு
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவகம்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்,
ஓசூர் காவேரி மருத்துவமனை
இணைந்து
பள்ளி மற்றும் கல்லூரி
வாகன ஓட்டுனர்களுக்கு
இலவச கண் சிகிச்சை முகாம்
நடைபெற்றது.
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக
அரங்கில் ஜனவரி 13-ம் தேதி
நடைபெற்ற
இந்த முகாமில்
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர்
பிரபாகர்
தலைமை வகித்து
தொடங்கி வைத்தார்.
ஓசூர் வட்டார
மோட்டார் வாகன ஆய்வாளர்
மணிமாறன்,
ஓசூர் மேக்னம் அரிமா
சங்க தலைவர்
அரிமா. கே. மகேந்திரன்,
ஓசூர் காவேரி மருத்துவமனை
மனிதவள மேம்பாட்டு அதிகாரி
பிந்து,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓசூர் காவேரி
மருத்துவமனை
இந்த முகாமில் ஓசூர் காவேரி
மருத்துவமனையின்
கண் மருத்துவ நிபுணர்
டாக்டர். ஆரத்தி
தலைமையில் செவிலியர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று,
பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு
கண் பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர்.
முகாமில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு
முதலில் உடலின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு,
பின்பு கண் பரிசோதனை செய்து
சிகிச்சை அளிக்கப்பட்டது.
200 ஓட்டுனர்கள் பங்பேற்பு
ஜனவரி 13-ம் தேதி காலை 9 மணி முதல்
மதியம் 2மணி வரை நடந்த
இந்த முகாமில் ஓசூர் பகுதியில் உள்ள
பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுனர்கள்
200 பேர் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.
புற்று நோய் விழிப்புணர்வு
மேலும் இந்த இலவச கண்சிகிச்சை முகாமில்
காவேரி மருத்துவக்குழுவினரால்,
பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு
புற்று நோய் விழிப்புணர்வு பற்றிய
விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இலவச கண்சிகிச்சை முகாமில்
மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பு
பணிகளை
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
செயலாளர்- நிர்வாகம்
அரிமா. என். கண்ணன்.
செயலாளர் – சேவைத் திட்டம்
அரிமா. ஆர்.ரவிசங்கர்.
பொருளாளர்
அரிமா. பி.மாதேஷ்குமார்.
கண்ணொளி திட்டத்தலைவர்
அரிமா. ஆர்.சி.கோவிந்தன்.
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
---------------------------------------------