நேற்றைய வரலாறு - இன்றைய பாடம்
----------------------------------------------------------------.
இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.
பிப்ரவரி 13: உலக வானொலி நாள்
மனிதத்தைக் கொண்டாடும் வலிமை வாய்ந்த ஊடகம்!!
வானொலிகள் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப். 13. -
உலக வானொலி தினம்
தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திராத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டு பிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 13-ம்தேதியை உலக வானொலி தினமாக கொண்டாடி வருகிறோம்.
வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும்,
பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும்,
முடிவெடுப்பவர்களை வானொலி,
மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும்,
இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, 2011 நவம்பர் 3-ம்தேதி உலக வானொலி தினத்தை அறிவித்தது.
2025 - ஆம் ஆண்டில் 14-வது சர்வதேச வானொலி தினத்தை யுனெஸ்கோ கொண்டாடுகிறது. முதலாவது உலக வானொலி நாள் இத்தாலி நாட்டில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 -இல் கொண்டாடப்பட்டது.
வானொலிகள் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
2025 – ம் ஆண்டு வானொலி தினத்துக்கான மையக்கருத்து
இந்த ஆண்டு, உலக வானொலி தினம் "வானொலி மற்றும் காலநிலை மாற்றம்" என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தும், இது வானொலி நிலையங்கள் இந்த அழுத்தமான பிரச்சினையில் தங்கள் பத்திரிகை செய்திகளை வெளியிடுவதை ஆதரிக்கும்.
காலநிலை மாற்றம் பற்றிய முக்கிய தகவல்களைப் பரப்புவதிலும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக வாதிடும் குரல்களைப் பெருக்குவதிலும், சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும் வானொலியின் பங்கை இந்த கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது.
-----------------------------------------------------------.