ஓசூரில் முதல் முறையாக
பெங்களுரு தங்கநகை கண்காட்சி
எம்எல்ஏ பிரகாஷ் பங்கேற்பு
ஓசூர். டிச. 06. –
தங்கநகை கண்காட்சி
மற்றும் விற்பனை
ஓசூரில் மூன்று நாட்கள் நடைபெறும்
பெங்களுரு தங்கநகை கண்காட்சி மற்றும் விற்பனையை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில்
முதல் முறையாக பெங்களுரு த்ரெட்ஸ் ஆப் கோல்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு, கர்நாடகா,
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட
தங்கநகை விற்பனை நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.
எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
ஓசூர் மூக்கொண்டப்பள்ளி, ஹில்ஸ் ஹோட்டலில் டிசம்பர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை
3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஓசூர்
எம்எல்ஏ ஒய். பிரகாஷ் பங்கேற்று, தங்க நகை கண்காட்சி மற்றும் விற்பனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் பிரபல தங்கநகை விற்பனை நிறுவனங்களின் தங்கம், வைரம், ரத்தினம், பிளாட்டினம், முத்து, வெள்ளி ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள 3 லட்சத்துக்கும் அதிகமான கலைநயமிக்க அழகிய வடிவமைப்பிலான
ஆபரணங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் மாநகர பொது சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன்
இதுகுறித்து த்ரெட்ஸ் ஆப் கோல்டு நிறுவனர் சங்கீதா வலேச்சா, கூறியதாவது, மக்களிடையே நம்பிக்கையை பெற்ற பிரபலமான நகை பிராண்டுகளை பெங்களுரைச் சுற்றியுள்ள நுகர்வோருடன் இணைப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும். ஓசூரில் முதல் முறையாக பெங்களுரு தங்கநகை கண்காட்சியை
நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த துவக்க விழாவில் ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன்,
பல் மருத்துவமனை நிறுவனர் மோகனா, பல் அறுவை சிகிச்சை நிபுணர் தீஷா, இந்து ரேகா, கவுரிசங்கர், தொழிலதிபர் சீதுஸ் பல்லுஹட், சீதுலட்சுமி, ரேகா ராஜேஷ், சனம் டெம்பலா,
சாக்ஷி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.