கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
தூய இருதய ஆண்டவர்
ஆலயத்தில்
குருத்தோலை பவனி
ஓசூர். ஏப்ரல். 13. –
தூய இருதய ஆண்டவர் ஆலயம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
தூய இருதய ஆண்டவர்
ஆலயத்தில்
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
இந்த பவனியில் நூற்றுக்கணக்கான இறைமக்கள் மறை பாடல் பாடியபடி கைகளில் குருத்தோலை ஏந்தி
பங்கேற்றனர்.
புனித வெள்ளிக்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலையில்
தூய இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது.
ஈஸ்டர்
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளிக்கிழமை மற்றும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாள் முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறுவது வழக்கமாகும்.
விபூதி புதன்
நடப்பாண்டில்
2025-ம் ஆண்டு ஏப்ரல்
18-ம் தேதியன்று புனித வெள்ளிக்கிழமை முன்னிட்டு, தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில்
கடந்த மார்ச் 5-ம் தேதி
விபூதி புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தவக்காலம்
விபூதி புதன் அன்று முதல் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது.
சிலுவைப்பாதை
அதைத் தொடர்ந்து மார்ச் 7 -ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தை சுற்றிலும்
சிலுவைப்பாதை ஜெபவழிபாடு மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது.
குருத்தோலை ஞாயிறு பவனி
40 நாட்கள் தவ வாழ்வுக்கு பின்னர்
ஏப்ரல் 18-ம் தேதி புனித வெள்ளிக்கிழமை முன்னிட்டு
13 -ம் தேதியான
ஞாயிற்றுக்கிழமை
அன்று குருத்தோலை
ஞாயிறு பவனி நடைபெற்றது.
இந்த குருத்தோலை
ஞாயிறு பவனியை
பங்குதந்தை ஜார்ஜ்
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்த பவனி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் தொடங்கி
ஓசூர் – ரயில் நிலைய சாலை,
அண்ணா சிலை,
பழைய தொலைபேசி
அலுவலக சாலை,
ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலை,
வழியாக பயணித்து
தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நிறைவடைந்தது.
அதைத்தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில்
பங்கு தந்தை ஜார்ஜ்
தலைமையில்
குருத்தோலை சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் சிறப்பு மறையுரையுடன் ஜெப வழிபாடு நடைபெற்றது.
குருத்தோலை ஞாயிறு பவனியில்
பங்குதந்தை ஜார்ஜ்,
உதவி பங்குதந்தை சூசை,
அருட்சகோதரிகள்,
இளைஞர் அணி தலைவர்
சாமூவேல் விக்டர்,
பங்கு பேரவை
துணைத்தலைவர்
தமிழ்வாணன்
புனித வின்சென்ட்
பவுல் சபை
தலைவர் ஜான்சன்
பீட்டர் சின்னப்பன்,
பங்கு குழுவினர்,
பாடல் குழுவினர்,
இறை மக்கள்,
ஆகியோர் குருத்தோலை ஏந்தி மறை பாடல் பாடியபடி பவனியாக சென்றனர்.
-------------------------------------.