கிருஷ்ணகிரி மாவட்டம்
அதிக சாலை விபத்துக்கள்
ஏற்படும் பகுதியில் ஆய்வு செய்து
விபத்துக்களை குறைப்பதற்கு
டெல்லி போக்குவரத்து துறையின் மூலம்
அங்கீகரிக்கப்பட்ட
சேவ் லைப் பவுண்டேஷன்
அமைப்பின் பிரதிநிதிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்களுடன் கலந்துரையாடினர்.
ஓசூர். நவ. 18. –
சாலை விபத்துக்களை குறைக்க
டெல்லி சேவ் லைப் பவுண்டேஷன்
அமைப்பின் பிரதிநிதிகள் -
கலெக்டர் - கலந்துரையாடல்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
மாவட்டத்தில் அதிக சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து, விபத்துகளை குறைப்பதற்கு
டெல்லி போக்குவரத்து துறையின் மூலம்
அங்கீகரிக்கப்பட்ட சேவ் லைப் பவுண்டேஷன்
அமைப்பின் பிரதிநிதிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்களுடன்
17.11.2025 அன்று கலந்துரையாடினர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அதிக சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை
நேரில் ஆய்வு செய்து விபத்துகளை குறைப்பதற்கு
டெல்லி போக்குவரத்து துறையின்
மூலம் அங்கீகரிக்கப்பட்ட
சேவ் லைப் பவுண்டேஷன் அமைப்பின்
பிரதிநிதிகளுடன் ஆலோசனை
மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை
17.11.2025 முதல் 20.11.2025 வரை
காவல்துறை,
போக்குவரத்து துறை,
மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும்
தேசிய நெடுஞ்சாலை துறை
அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு
செய்ய உள்ளனர் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
திரு.சங்கர்,
வட்டார போக்குவரத்து அலுவலர்
திரு.ஈஸ்வரன்,
தனி வட்டாட்சியர்
திரு.கிருஷ்ணமூர்த்தி
மற்றும் தேசிய மற்றும்
மாநில நெடுஞ்சாலைத் துறை
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--------------------------------.