கிருஷ்ணகிரி மாவட்டம்
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்
உதவி மையங்கள்
வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை
பூர்த்தி செய்ய உதவிடும் வகையில்
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும்
உதவி மையங்கள்
காலை 8.00 மணி முதல்
இரவு 8.00 மணி வரை செயல்படும்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ் குமார்,இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
ஓசூர். நவ. 19. –
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்
உதவி மையங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை
பூர்த்தி செய்ய உதவிடும் வகையில்
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும்
உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவத்தில்
உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு
கணக்கெடுப்பு படிவத்தினை
பிழையில்லாமல் பூர்த்தி செய்து,
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/
உதவி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ் குமார்,இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது…
இந்திய தேர்தல் ஆணையத்தின்
அறிவுரையின் படி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026
நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 04 - 11 - 2025 முதல்
வீடு வீடாக கணக்கெடுப்பு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு இரண்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை
பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி
நிலை அலுவலர்களிடம் ஒரு படிவத்தை
கையொப்பமிட்டு திரும்ப வழங்க வேண்டும்.
மற்றொரு படிவத்தில் வாக்குச்சாவடி
நிலை அலுவலரிடம் ஒப்புகை பெற்று
தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும்.
உதவி மையங்கள் (Helpdesks)
வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை
பூர்த்தி செய்ய உதவிடும் வகையில்
உதவி மையங்கள் (Helpdesks)
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும்
காலை 8.00 மணி முதல்
இரவு 8.00 மணி வரை
செயல்படும்.
இதில் வாக்காளர்கள்,
கணக்கெடுப்பு படிவங்களை
பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின்
அதனை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் மேற்படி மையங்களில்
2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கான
சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல்களை
கண்டு சரிப்பார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி
தங்களது கணக்கெடுப்பு படிவத்தில் உள்ள
சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு
கணக்கெடுப்பு படிவத்தினை பிழையில்லாமல்
பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்
/ உதவி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------.