64 தூய்மை பணியாளர்களுக்கு
24 மாற்றுத்திறனாளிகளுக்கு
நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
64 தூய்மை பணியாளர்களுக்கு
ரூ.25,200 மதிப்பிலான கல்வி உதவித்தொகை,
நலவாரிய அட்டைகள்,
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீட்டு அட்டைகள்,
24 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.3,47,760 மதிப்பிலான திறன்பேசிகள்
உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தூய்மை பணியாளர்கள்
நல வாரிய தலைவர்
முனைவர்.
திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி
அவர்கள் பங்கேற்பு
ஒசூர். பிப். 6. –
தூய்மை பணியாளர்கள் நல வாரியம்
ஓசூர், மத்திகிரி அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி வளாக கூட்டரங்கில்,
தாட்கோ சார்பாக,
64 தூய்மை பணியாளர்களுக்கு
ரூ.25,200 மதிப்பில்
நலத்திட்ட உதவிகளை
தூய்மை பணியாளர்கள்
நல வாரிய தலைவர்
முனைவர்.
திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஒசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.,
ஆகியோர் முன்னிலையில்
இன்று (06.02.2026) வழங்கினார்.
தூய்மை பணியாளர்கள்
நல வாரிய தலைவர்
முனைவர்
திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் நல வாரியம் 2007 -ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இவ்வாரியத்தில் பதிவு செய்த
உறுப்பினர்களுக்கு
விபத்து மரண உதவித்தொகை,
இயற்கை மரண நிதியுதவி,
ஈமச்சடங்கு நிதியுதவி,
கல்வி உதவித்தொகை,
திருமண நிதியுதவி,
மகப்பேறு நிதியுதவி,
கண்கண்ணாடி வாங்க நிதியுதவி,
முதியோர் ஓய்வூதியம்,
வீடு வழங்கும் திட்டம்
போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தூய்மை பணியாளர்கள் செய்வது
பணியல்ல, அது ஒரு சேவை என
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் கூறியுள்ளார்.
தூய்மை பணியாளர்கள் கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரை
பணயம் வைத்து இந்த மண்ணை
காத்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின்
கோரிக்கைகளை அவர்களிடம்
நேரடியாக கேட்கப்பட்டு அவற்றை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் பொறுப்பேற்ற பிறகு
தூய்மை பணியாளர் வாரியத்திற்கு
ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளார்.
தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பாக
பணியாற்ற வேண்டும்.
நலம் காக்கும் ஸ்டாலின்
திட்ட மருத்துவ முகாம்
தூய்மை பணியாளர்களின் வருங்காலத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
அதற்காக தூய்மை பணியாளர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய
நலம் காக்கும் ஸ்டாலின்
திட்ட மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில் மருத்துவ வசதிகள்
அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.
அதேப்போல் உயர் சிகிச்சைக்காக
மாவட்ட தலைமை மருத்துவமனைகளில்
பரிந்துரை செய்யப்பட்டு உயர் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
மேலும்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
பணியாளர்களுக்கான
முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை
தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ்,
தூய்மை பணியாளர்களுக்கு அவர்களுடைய பணிகளுக்கு இடையில்,
உணவு வேளையில்
சுவையும் ஆரோக்கியமும்
நிறைந்த உணவு
வழங்கப்பட்டு வருகிறது.
அதேப்போல் தூய்மை பணியாளர்கள்
தங்களது குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்.
அவர்கள் நல்ல முறையில் படித்தால்தான்
ஒரு சமுதாயம் முன்னேற முடியும்.
தூய்மை பணியாளர் குழந்தை
மாவட்ட ஆட்சியராக உருவாகியுள்ளது
என்ற வரலாறு உருவாக்க வேண்டும் என
தூய்மை பணியாளர்கள்
நல வாரிய தலைவர்
முனைவர்
திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
தூய்மை பணியாளர்கள்
நல வாரிய தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் முன்னிலையில்,
20 தூய்மை பணியாளர்களுக்கு
ரூ.25,200 மதிப்பில்
கல்வி உதவித்தொகைக்கான
ஆணைகள்,
32 தூய்மை பணியாளர்களுக்கு
நலவாரிய அட்டைகள்
மற்றும்
12 தூய்மை பணியாளர்களுக்கு
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள்
மற்றும்
மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை சார்பாக,
24 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.3,47,760 மதிப்பில்
திறன்பேசிகள் என மொத்தம்
88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும்,
ஜீவா சேவை அறக்கட்டளை
சார்பாக, தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக
தலா ரூ.1000 வீதம்
2 பயனாளிகளுக்கு ரூ.2000 -த்திற்கான
காசோலைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.சிவகுமார்,
மாவட்ட பொது மேலாளர் (தாட்கோ)
திரு.வேல்முருகன்,
ஓசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு.எஸ்.ஆனந்தைய்யா,
மாநகராட்சி சுகாதார அலுவலர்
திருமதி. மரு.அஜிதா,
பொது சுகாதாரக்குழு தலைவர் / மாமன்ற உறுப்பினர்
திரு.என்.எஸ்.மாதேஸ்வரன்,
மண்டல குழு தலைவர்
திரு.ரவி,
மாமன்ற உறுப்பினர்கள்
திரு.வெங்கடேசன்,
திருமதி.பாக்கியலட்சுமி,
திருமதி.இந்திராணி,
திருமதி.தேவி மாதேஷ்,
வட்டாட்சியர்
திரு.குண சிவா
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
-----------------------------------.