கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி தூய ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
கல்லறை திருவிழா
(ALL SOULS DAY)
கல்லறை தோட்டத்தில்
சிறப்பு திருப்பலி - திருவழிபாடு
இறைமக்கள் திரளாக பங்கேற்பு
ஓசூர். நவ. 2. –
பாரம்பரிய தூய ஆரோக்கிய
அன்னை ஆலயம்
மத்திகிரி பாரம்பரிய தூய ஆரோக்கிய அன்னை
ஆலயம் மற்றும் கல்லறை தோட்டத்தில்
2025 – நவம்பர் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
கல்லறை திருவிழா முன்னிட்டு சிறப்பு திருப்பலி திருவழிபாடு மற்றும் கல்லறைகள் மந்திரிப்பு ஆகியவை நடைபெற்றது.
101 ஆண்டு பழமையான ஆலயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு
உட்பட்ட மத்திகிரியில்
குதிரைப்பாளையத்தில்,
1924-ம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான பாரம்பரிய தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்
மற்றும்
மத்திகிரி நேதாஜி நகரில்
25 ஆண்டுகளுக்கு முன்பு
கட்டப்பட்டுள்ள புதிய ஆலயம்
ஆகிய இரு ஆலயங்கள் அமைந்துள்ளது.
கல்லறை திருவிழா
முதல் திருப்பலி
பாரம்பரிய ஆலயத்தில் நவ. 2-ம் தேதி அன்று காலை 6 மணிக்கு கல்லறை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி திருவழிபாடு நடைபெற்றது.
இந்த திருப்பலியில்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி. பெரியநாயகம்
மற்றும்
பங்கு தந்தை
அருட்பணி. கிறிஸ்டோபர்
ஆகியோர் பங்கேற்று கல்லறை திருவிழா சிறப்பு திருப்பலி, மறையுரை நிகழ்த்தி வழிநடத்தினார்கள்.
பாரம்பரிய ஆலய வளாகத்தில் உள்ள
முன்னாள் பங்குதந்தையின்
கல்லறை வண்ணமலர்களால்
அலங்கரிக்கப்பட்டு,
பங்கு தந்தை
அருட்பணி. கிறிஸ்டோபர்
அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இரண்டாவது திருப்பலி
காலை 8 மணிக்கு மத்திகிரி நேதாஜிநகரில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கல்லறை திருவிழாவின் இரண்டாவது கட்டமாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
மூன்றாவது திருப்பலி
கல்லறை தோட்டம்
அதைத்தொடர்ந்து மத்திகிரி கூட்டுரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் மூன்றாவது கட்டமாக சிறப்பு திருப்பலி மற்றும் கல்லறைகள் மந்திரிப்பு திருவழிபாடு நடைபெற்றது.
இந்த கல்லறை சிறப்பு திருப்பலியில்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி. பெரியநாயகம்
மற்றும்
பங்கு தந்தை
அருட்பணி. கிறிஸ்டோபர்
ஆகியோர் பங்கேற்று சிறப்பு திருப்பலி, மறையுரை நிகழ்த்தி,
அனைத்து கல்லறைகளையும் மந்திரிப்பு செய்து வழிபாடு நடத்தினர்.
கல்லறை தோட்டம்
வண்ணமலர்களால் அலங்கரிப்பு
முன்னதாக கல்லறை திருவிழாவை
முன்னிட்டு மத்திகிரி
கூட்டுரோட்டில் உள்ள
கல்லறை தோட்டம்
சுத்தப்படுத்தப்பட்டு,
கல்லறைகள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்
பட்டிருந்தது.
இந்த மூன்று சிறப்பு திருப்பலிகளிலும்
அருட் கன்னியர்கள்,
பங்கு குழுவினர்,
பக்த சபைகள்,
பாடல்குழுவினர்,
இறைமக்கள்
திரளாக கலந்து கொண்டனர்.
------------------------.