கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அறிவுச்சார் தொழில் நுட்பம்
நேர்த்தியான உட்கட்டமைப்பு,
ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும்
பசுமையான கிருஷ்ணகிரி
போன்ற இலக்குகளை
அடுத்த 5 ஆண்டுகளில் அடைய
தங்களின் தொலைநோக்கு பார்வையை
13.02.2026 ஆம் தேதிக்குள்
sdckglsss@gmail.com
என்ற மின்னஞ்சலிலோ அல்லது
10.02.2026 அன்று
கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில்
நடைபெறும் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. பிப். 8. -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அறிவுச்சார் தொழில் நுட்பம்
நேர்த்தியான உட்கட்டமைப்பு,
ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும்
பசுமையான கிருஷ்ணகிரி
போன்ற இலக்குகளை அடுத்த 5 ஆண்டுகளில்
அடைய தங்களின் தொலைநோக்கு
பார்வையை 13.02.2026 ஆம் தேதிக்குள்
sdckglsss@gmail.com
என்ற மின்னஞ்சலிலோ அல்லது
10.02.2026 அன்று
கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில்
நடைபெறும் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு மு.க.ஸ்டாலின்,
அவர்களின் தலைமையில்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில்
மாநிலத்தின் பொருளாதார
வளர்ச்சி 11.19% உயர்ந்துள்ளது.
இது இந்தியாவில் உள்ள அனைத்து
மாநிலங்களை விட மிக உயர்ந்த
வளர்ச்சியாகும்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மாற்றத்தை உருவாக்கும் நலதிட்டங்கள்
இன்று கோடிக்கணக்கான மக்களுக்கு உதவுகின்றன.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்களின் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் தலைமையிலான அரசு
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஒரு தொலைநோக்கு திட்டத்தை
உருவாக்க உங்க கனவ சொல்லுங்க
என்ற திட்டத்தை உருவாக்கி
அதன் மூலம்
அரசு ஒவ்வொரு குடும்பத்தின் கனவையும் கேட்கிறது.
இதன் தொடர்ச்சியாக
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 உத்தி மற்றும் செயல் திட்டத்தை தயாரித்து வெளியிடவுள்ளது.
அதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அடுத்த ஐந்தாண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள் அரசு என்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற
துறை சார்ந்த வல்லுநர்களின் தொலைநோக்கு பார்வையை பெற அறிவுறுத்தியுள்ளது.
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அறிவுச்சார் தொழில் நுட்பம்
நேர்த்தியான உட்கட்டமைப்பு.
ஆரோக்கியமான வாழ்வியல்
மற்றும்
பசுமையான கிருஷ்ணகிரி
போன்ற இலக்குகளை அடுத்த
5 ஆண்டுகளில் (2030 ஆம் ஆண்டுக்குள்)
அடைய தங்களின் தொலைநோக்கு
பார்வையை
sdckgisss@gmail.com
என்ற மின்னஞ்சலில் 13.02.2026 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
அல்லது 10.02.2026 அன்று
கிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில்
பிற்பகல் 02.00 மணி முதல்
மாலை 06.00 மணி வரை
நடைபெறும் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------.