கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
பூம்புகார் கண்காட்சி
(12-03-25 TO 23-03-25)
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம் சார்பில்
ஓசூரில்
பூம்புகார் கைவினைப் பொருட்கள்
கண்காட்சி மற்றும் விற்பனை
தொடக்கம்
எம்எல்ஏ பங்கேற்பு
ஓசூர். மார்ச். 13. –
ஓசூரில் பூம்புகார் கைவினைப் பொருட்கள், கைத்தறி, நகைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு நிறுவனம்
பூம்புகார்
தமிழ் நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
பூம்புகார் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டு, பாராட்டுக்குரிய நிறுவனமாக
திகழ்கிறது.
“பூம்புகார், கைத்திறன் உலகில் தனியொரு முத்திரை பதித்து செம்மையாக செயல்படும் ஒரு நிறுவனமாக உள்ளது”.
பாராம்பரியம்,
கலாச்சாரம்,
பண்பாடு,
இவைகளை கைவினை கலைகள்
மூலம் பேணி காப்பதோடு
கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும்
விளங்குகிறது.
கைவினை கலைஞர்கள்
மேலும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு பல விருதுகளை
கொடுத்து ஊக்குவிப்பது மற்றும் இக்கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் ஓர் அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.
கைவினைக் கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தோடும், பொதுமக்களுக்கு நேரடியாக
கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடும், பூம்புகார் நிறுவனம் நாடெங்கும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சேலம் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில்,
கைவினை கண்காட்சி,
ஓசூரில் மார்ச் 12-ம் தேதி முதல்
மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஓசூர் ரயில் நிலையம் சாலையில் உள்ள
மீரா மஹால் அரங்கில் நடைபெறும் இந்த கண்காட்சியை
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்,
புதன் கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக அனைத்து கைவினை கலைப்பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக
தூங்கு வாகை மரத்தால் அழகிய கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ள
ரூ.55 ஆயிரம் விலையுள்ள
விநாயகர் சிலை,
ஸ்டோன் பவுடரில் தத்ரூபமாக
வடிவமைக்கப்பட்டுள்ள
ரூ.1,700 விலையுள்ள
கலைஞர் சிலை,
உடல் சூட்டை தணிக்கும்,
மன அழுத்தம் குறைக்கும்
ரூ.550 முதல் ரூ.3.500 விலையுள்ள
தர்பை புல் பாய்கள்,
ரூ. 4,500 விலையுள்ள
8 முக ருத்ராட்ச மாலை
கருங்காலி மரம்
கருங்காலி மாலைகள் –
ரூ.650 முதல் 2,500 வரையும்,
கருங்காலி மரம் ஸ்டேண்ட் –
ரூ.3,600 என பல்வேறு வகையான
கைவினை பொருட்கள்
இந்த கண்காட்சியில்
விற்பனைக்கு உள்ளது.
சுவாமிமலை பஞ்சலோக
சிலைகள்,
நாச்சியார்கோயில் பித்தளை
குத்து விளக்குகள்,
பித்தளை கலைப்பொருட்கள்,
தஞ்சாவூர் கலைதட்டுகள்,
தஞ்சாவூர் கலை ஓவியங்கள்,
வெண்மர சிற்பங்கள்,
சந்தன மரச்சிற்பங்கள்,
சந்தனக்கட்டைகள்,
நூக்கமரம் பொருட்கள்,
நினைவுப்பரிசுகள்,
பலவித விளக்குகள்,
கருப்பு மற்றும் வெள்ளை
உலோக பொருட்கள்,
என காண்போரை வியக்கவைக்கும்
கலை நயமிக்க அழகிய கைவினைப்
பொருட்கள் கண்காட்சியில் விற்பனைக்குள்ளது.
கர்நாடகா மாநில புகழ்பெற்ற
சென்னபட்டணா பொம்மைகள்,
காகிதக் கூழ் பொம்மைகள்,
பயன்பாட்டு கைவினைப் பொருட்கள், கற்சிற்பங்கள்,
மற்றும் ஏராளமான
கைவினைப் பொருட்கள்
ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு,
கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
முத்து,
பவளம்
நவரத்தின மாலைகள்,
ராசிகற்கள்,
ஸ்படிக மணிமாலைகள்,
ருத்ராட்ச மணி மாலைகள்,
பஞ்சலோக மோதிரங்கள்,
வளையங்கள்,
செம்பு காப்பு,
கோமதி சக்கரம்,
கருங்காலி மாலைகள்,
பஞ்சலோக நகைகள்
போன்ற பலவிதமான
பூஜை பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
மேலும் கைத்தறி தொடர்பான
மகளிருக்கான
டாப்ஸ் வகைகள்,
பேன்சி சுடிதார் வகைகள்,
கலம்காரி பைகள்,
அழகிய கலைநயத்துடன்
வண்ணம் அச்சிடப்பட்ட புடவைகள்,
பேன்சி சேலைகள்,
கைப்பைகள்
போன்ற எண்ணற்ற
கைத்தறி வகைகளில்
வண்ணமயமான
தரமான ஜவுளிகள்
இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில்
குறைந்த பட்சமாக
ரூ.50 முதல் ரூ.65 ஆயிரம்
வரையிலான
கைவினைப்பொருட்கள் விற்பனைக்குள்ளது.
10 சதவீதம் தள்ளுபடி
அனைத்து பொருட்களுக்கும்
சிறப்பு அம்சமாக
10 சதவீதம் தள்ளுபடி
வழங்கப்படுகிறது.
யுபிஐ (UPI) வசதி
அனைத்து வங்கிகளின்
(Debit, Credit) அட்டைகளுக்கும் எவ்விதமான
சேவைக்கட்டணமும் இல்லை.
மற்றும்
யுபிஐ(UPI) பரிவர்த்தனைகள்
மூலமாக
பண பரிமாற்றம் செய்து
கொள்ள வசதி உள்ளது.
இந்த பூம்புகார் கைவினை கண்காட்சியில்
தரமான,
அழகிய கலைநயமிக்க,
பல்வேறு கைவினைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளது.
கண்காட்சி - தினமும்
காலை 10 மணி முதல்
இரவு - 8 மணி வரை,
( ஞாயிறு உட்பட)
மார்ச் - 23-ம் தேதி வரை
செயல்படுகிறது.
இந்த கண்காட்சியில் சுமார் ரூ.15 லட்சம் வரை விற்பனை இலக்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக
மேலாளர் நரேந்திர போஸ்
தெரிவித்துள்ளார்.
----------------------------------------------.