கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒசூர் நகர பேருந்து நிலையத்தில்
ஓசூர் – தேன்கனிக்கோட்டை
ஓசூர் – அத்திப்பள்ளி
வழித்தடத்தில்
4 புதிய தாழ்தள நகர பேருந்துகளின்
இயக்கம் தொடக்க விழா
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்
மேயர் எஸ்.ஏ. சத்யா
பங்கேற்பு
ஒசூர், நவ. 5. –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி
ஒசூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து
ஒசூர் - தேன்கனிக்கோட்டை
வழித்தடத்தில் ஒரு பேருந்தும்,
ஒசூர் – அத்திப்பள்ளி -
வழித்தடத்தில் 3 பேருந்துகளும்
என மொத்தம்
4 புதிய தாழ்தள நகர பேருந்துகளின்
இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது.
ஒசூர் பேருந்து நிலையத்தில் நவ. 5-ம் தேதி அன்று புதிய பேருந்துகளின் இயக்க தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர்
மற்றும்
எம்எல்ஏ ஒய். பிரகாஷ்,
ஓசூர் மாநகர செயலாளர் மற்றும்
மேயர் எஸ்.ஏ. சத்யா
ஆகியோர் பங்கேற்று
4 புதிய தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த 4 புதிய பேருந்துகளில்
3 பேருந்துகள் (எண் 666) – ஓசூர் – சிப்காட் – அத்திப்பள்ளி வழித்தடத்திலும்,
ஒரு பேருந்து, - ஓசூர் - மத்திகிரி – பாரந்தூர் – தேன்கனிக்கோட்டை
வழித்தடத்திலும்
இயக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட அவைத்தலைவர்
யுவராஜ்,
மாவட்ட பொருளாளர்
சுகுமாரன்,
துணை மேயர்
ஆனந்தய்யா,
மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை
துணை செயலாளர் மற்றும்
மாநகர சுகாதாரக்குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்,
பகுதி செயலாளர்கள்
வெங்கடேஷ்,
ராமு,
ராஜா,
மாநில இளைஞர் அணி துணை செயலாளர்
சீனிவாசன்,
மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்
சுமன்,
கண்ணன்,
சக்திவேல்,
மாணிக்கவாசகம்,
மாநகர இளைஞர் அணி அமைப்பாளர்
கலை,
துணை அமைப்பாளர்
சீனிவாசன்,
வார்டு செயலாளர்கள்
ஜான்,
சாகர்,
வடிவேல்,
மனோகரன்,
சீனிவாசன்,
பார்த்திபன்,
பாலமுரளி,
மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
---------------------------.