ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
மலர் - 1. இதழ்கள் - 282a
ஓசூர் வட்டாரத்தில்
ஊட்டச்சத்து
வேளாண்மை இயக்க
திட்ட சிறப்பு முகாம்
News editor - Jothi Ravisugumar,M.A.
ஊட்டச்சத்து
வேளாண்மை இயக்க
திட்ட சிறப்பு முகாம்
News editor - Jothi Ravisugumar,M.A.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டாரத்தில்
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட
சிறப்பு முகாம்
ஓசூர். ஜுலை. 7. –
முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின்
வேளாண்மைத்துறையில்
2025-26 - ஆம் ஆண்டிற்கான
சிறப்புத் திட்டமாக
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்
திட்டமானது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சென்னையில் 6.7.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்"
சிறப்பு திட்ட முகாம் 06.07.2025 அன்று நல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு
ஒசூர் வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி.அ. புவனேஸ்வரி
அவர்கள் தலைமை வகித்து,
வேளாண்மைத்துறை மானியத் திட்டங்கள்,
துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும்,
தேசிய உணவு எண்ணெய் இயக்கம் திட்டத்தின் கீழ் நிலக்கடலை பெருவிளக்க பண்ணை செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைதொகுப்பு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது, விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அவர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்
என விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் பயறு வகைத் தொகுப்பு ஆக
மரத்துவரை - 5 கிராம்,
அவரை 10 கிராம்,
காராமணி 10 கிராம்,
ஆகியவை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் மூலம் வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்து பயன் பெறுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.
ஓசூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்
திருமதி.சிவசங்கரி
அவர்கள் இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மானியத்திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார்.
மேலும் முகாமில்
கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக
பப்பாளி,
எலுமிச்சை,
கொய்யா,
ஆகிய பழச்செடி நாற்றுகள் தொகுப்பும்,
தக்காளி,
கத்தரி,
மிளகாய்,
வெண்டை,
கொத்தவரை,
கீரை விதைகள்,
ஆகியவை அடங்கிய காய்கறி
விதைத் தொகுப்பும்
இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படடது.
இம்முகாமில்
வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.