உலகில், பெண் குழந்தைகள்
பாதுகாப்புக்கு
ஐ.நா., சபையால் அறிவிக்கப்பட்ட
தினம் தான், சர்வதேச பெண் பிறப்புறுப்பு
சிதைப்பு எதிர்ப்பு தினம்.
பிப்ரவரி – 6 –
சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு
எதிர்ப்பு தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப்ரவரி. 6. –
ஐ.ந. சபை
உலகில், பல கோடி பெண் குழந்தைகள் அனுபவித்த கொடுமை, இனி எந்த பெண் குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஐ.நா., சபையால் அறிவிக்கப்பட்ட தினம் தான், சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம்.
ஓர் ஆண்டில், எத்தனையோ தினங்கள் இருந்தாலும், இந்த தினத்திற்கு உள்ள வலியும், வேதனையும், சோகமும், வேறு எந்த தினத்திற்கும் இருக்குமா எனத் தெரியவில்லை. எதனால், இந்த தினம் என்பதை தெரிந்து கொண்டால், இதன் பின்னணியில் உள்ள வலியையும் புரிந்து கொள்ள முடியும்.
ஐ.நாவின் கணக்குப்படி,
20 பெண்களில் ஒரு பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்.
200 மில்லியன்
பெண் குழந்தைகள்
உலகில் வாழும் 200 மில்லியன் பெண்களுக்கு, பிறப்புறுப்பின் வெளிபுறம் வெட்டப்பட்டோ, மாற்றப்பட்டோ அல்லது நீக்கப்பட்டோ உள்ளது.
பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டுவர இதற்கான சர்வதேச தினம் (பிப்ரவரி 6) அனுசரிக்கப்படுகிறது.
வயது வந்த பெண்கள், சிறுமிகளின் பிறப்புறுப்பு சிறு வயதிலேயே சிதைக்கப்படுகிறது. சில சமயம் குழந்தைகளாக இருக்கும் போது சிதைக்கப்படுகிறது.
இதன் காரணமாக உடல்நல மற்றும் மனநல பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் வரலாம்.
பெண் பிறப்புறுப்பு சிதைவென்றால் என்ன?
இந்த சடங்கு 'காஃப்டா' என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா-வின் விளக்கம் கூறுகிறது.
இதையும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இந்நடைமுறையை நிறுத்தக் கோரி டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.
ஏன் இது பழக்கத்தில் உள்ளது?
இதற்கு மதம் சார்ந்த மூடநம்பிக்கையும், பிற மூடநம்பிக்கைகளும்தான் காரணம். பெண்களை திருமணத்திற்கு தயார் செய்ய, ஆண்களின் உடலுறவு சுகத்தை அதிகரிக்கவென பல மூடநம்பிக்கைகள் இதனுடன் பின்னிப் பிணைந்துள்ளன.
பெண் பிறப்பு சிதைப்பு செய்யப்படும் சமூகத்தில் அந்த பழக்கத்திற்கு உள்ளாகாத பெண்கள் அசுத்தமானவர்களாக கருதப்படுகிறார்கள்.
இந்த பழக்கத்தை பெண்களுக்கு எதிரான வன்முறையாகவே கருதுகிறார்கள் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.
இந்த பழக்கமானது
எங்கெல்லாம் உள்ளது?
இந்த பழக்கமானது
ஆப்ரிக்கா
முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது,
பின்
ஆசியா,
மத்திய கிழக்கின்
சில பகுதிகளிலும்
இந்த பழக்கம் உள்ளது.
அதுமட்டுமல்லாமல்,
ஐரோப்பா,
வட மற்றும் தென் அமெரிக்கா
மற்றும்
ஆஸ்திரேலியாவில்
குடியேறிய சில சமூகங்கள் மத்தியிலும் இந்த பழக்கம் உள்ளது.
யுனிசெஃப்பின் ஆய்வுப்படி ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள 29 நாடுகளில் இந்த பழக்கம் உள்ளது.
பிரிட்டனில் இந்த பழக்கம் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டாலும், இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
உலகில், பல கோடி பெண் குழந்தைகள் அனுபவித்த கொடுமை, இனி எந்த பெண் குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஐ.நா., சபையால் அறிவிக்கப்பட்ட தினம் தான்,
சர்வதேச பெண் பிறப்புறுப்பு
சிதைப்பு எதிர்ப்பு தினம்.
-----------------------------------------.