ஓசூர் ஏசியன் கிறிஸ்டியன் அகாடமியில்
கல்வி நிறுவனங்களுக்கிடையே
தேசிய அளவிலான சமையல் போட்டி
சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற
சென்னை எம்ஜிஆர்
பல்கலைக்கழக கல்லூரி
ஓசூர். நவ. 30. –
by Jothi Ravisugumar
மலரும் சமையல்
கலைஞர்களின் சவால் – 2024”
ஓசூர் ஏசியன் கிறிஸ்டியன் அகாடமியில் நடந்த
தேசிய அளவிலான சமையல் கலை போட்டியில் சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழக கல்லூரியின் மாணவ, மாணவிகள் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
இந்தியாவின் முதல்
கேட்டரிங் மற்றும் வேளாண்
அறிவியல் கல்லூரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம்
ஜீமங்கலம் அருகே ஏசியன் கிறிஸ்டியன் அகாடமி அமைந்துள்ளது. இங்கு
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இந்தியாவின் முதல்
கேட்டரிங் மற்றும் வேளாண் அறிவியல் கல்லூரியும், இயங்கி வருகிறது.
இந்த கல்லூரி சார்பில்
முதல் முறையாக தேசிய
அளவிலான கல்வி நிறுவனங்களுக்கு
இடையே இளம் சமையற்கலை
வல்லூநர்களை ஊக்கப்படுத்தும்
விதமாக
“மலரும் சமையல்
கலைஞர்களின் சவால் – 2024”
என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் சமையல் கலை போட்டிகள் நடைபெற்றது.
ஏசியன் கிறிஸ்டியன் அகாடமி
தலைவர் ஸ்டீபன் ஜார்ஜ்,
ஏசியன் கிறிஸ்டியன் அகாடமி தலைவர் ஸ்டீபன் ஜார்ஜ், அகாசி இயக்குனர் மேத்யூ ஸ்டீபன்சன்,
ஏசிஏ பொது மேலாளர் லெவி பால்லஸ் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
100-க்கும் அதிகமான
இளம் சமையல் கலைஞர்கள்
இதில் நாடு முழுவதும் உள்ள 12 கேட்டரிங் அறிவியல் கல்லூரிகளில் இருந்து100-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
7 பிரிவுகளில் போட்டி
இந்த சமையல் போட்டிகள், லைவ் குக்கிங், லைவ் பாஸ்தா, மிஸ்ட்ரி பேஸ்கட், கேக் அலங்காரம், பழங்கள் மற்றும் காய்கறிகள் கார்விங், போட்டோகிராபி, மற்றும் உணவு சம்பந்தமான குறும்படம் தயாரித்தல் ஆகிய 7 பிரிவுகளில் இந்த சமையல் போட்டிகள் நடத்தப்பட்டது.
நடுவர்கள்
சமையல் கலை நிபுணர்கள்
இந்த போட்டிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல சமையல்கலை நிபுணர்கள் நடுவர்களாக இருந்து முதல் 3 இடங்களை வென்ற கல்லூரிகளை தேர்ந்தெடுத்தனர். மேலும் அனைத்து சமையல் கலை பிரிவுகளிலும் பங்கேற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கல்லூரியையும் தேர்வு செய்தனர்.
சென்னை எம்ஜிஆர்
பல்கலைக்கழக கல்லூரிக்கு
சாம்பியன்ஷிப் பட்டம்
இதில் சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழக கல்லூரியின் மாணவ, மாணவிகள் அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்று, திறமையாக செயல்பட்டு, 3ஆயிரம் புள்ளிகளை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
லெபனான் நாட்டைச் சேர்ந்த
தலைமை சமையலர் அமர்
ஏசியன் கிறிஸ்டியன் கல்லூரி அரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு லெபனான் நாட்டைச் சேர்ந்த தலைமை சமையலர் அமர் மற்றும் பிரபல சமையல் கலை நிபுணர் ரமேஷ் ஜவாஜி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பதக்கங்கள், சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி பாராட்டினார்கள்.
இதில் ஏசியன் கிறிஸ்டியன் கல்லூரி நிர்வாகிகள்
மற்றும் ஆண்டனி உள்ளிட்ட கேட்டரிங் கல்லூரி பேராசியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.