ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித்துறை சார்பில்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில்,
ரூ.74 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில்
வளர்ச்சி திட்டப்பணிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் நேரில்
பார்வையிட்டு ஆய்வு
ஓசூர். நவ. 13. –
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
பூதிமுட்லு கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் குளம்
புனரமைக்கப்பட்டுள்ள பணிகள்,
சென்னச்சந்திரம் ஊராட்சி,
பேட்டப்பனூர் கிராமத்தில்,
பாரத பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ்
14 வீடுகளின் கட்டுமான பணிகள்,
மாரசந்திரம் கிராமத்தில், மாரசந்திரம்
அணைகட்டு, படேதலவாய் ஏரிக்கு நீர் செல்லும்
கால்வாய்கள் மற்றும்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் 2026
குறித்து விழிப்புணர்வு பதாகைள் வைக்கப்பட்டுள்ள பணிகளையும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் இன்று (13.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
அரியனப்பள்ளி நீர்வடிப்பகுதிக்குட்பட்ட
பூதிமுட்லு கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ கோதண்டராமசாமி கோயிலில்,
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு , -
IV (PMKSY - WDC - 2.0),
தொழில் நுட்ப ஆலோசனை மற்றும்
கண்காணிப்பின் கீழ்
ஒசூரைச் சார்ந்த
சுற்றுச்சூழல் ஆர்வலர்
திரு. லட்சுமணன்
மற்றும்
பயோட்டா சாயில் தொண்டு நிறுவனம்
மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு
ஆகியோர் இணைந்து
ரூ.4.00 லட்சம் மதிப்பில் குளம்
புனரமைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில்,
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் 2026
குறித்த விழிப்புணர்வு பதாகைள் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பங்கள்
தங்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டதா
என்பதை கேட்டறிந்து,
விண்ணப்பங்களை சரியான முறையில்
பூர்த்தி செய்து
வாக்கு சாவடி நிலை அலுவலர்களிடம்
வழங்க வேண்டும் என
பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
சார்பாக,
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
சென்னச்சந்திரம் ஊராட்சி,
பேட்டப்பனூர் கிராமத்தில்,
பாரத பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் தலா
ரூ.5.07 லட்சம் வீதம்
ரூ.70 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில்
புதியதாக கட்டப்பட்டு வரும்
14 வீடுகளின் கட்டுமான பணிகளை
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு
பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து
பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வு பணியின் போது
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
நீர்வளத்துறை செயற்பொறியாளர்
திரு. செந்தில் குமார்,
உதவி செயற்பொறியாளர்
திரு.சையத் ஜஹிருதின்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.பாப்பி பிரான்சினா,
திரு.குமரேசன்,
உதவி பொறியாளர்கள்
திரு.மணிவண்ணன்,
திருமதி.தீபமணி,
நீர்வடிபகுதி உதவி பொறியாளர்
திரு.சரவணன்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
---------------------------------------.