தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பம்
பங்களிப்பில்
ஓசூரில் புத்தாண்டு தினத்தை
புத்தகங்களோடு கொண்டாடுவோம்
ஒரு நாள் புத்தக கண்காட்சி
ஓசூர். ஜனவரி. 01. –
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும்
ஸ்ரீஅகத்தியர் வீர சிலம்பம் பங்களிப்பில்
புத்தாண்டு தினத்தை புத்தகங்களோடு
கொண்டாடுவோம் என்ற தலைப்பில்
ஒரு நாள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஓசூர் கிளை சார்பில் மக்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும்
ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தில்
புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2025-ம் ஆண்டு
ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தை
முன்னிட்டு ஓசூர் தளி சாலையில் உள்ள
மாநகராட்சி பூங்காவில் புத்தாண்டு தினத்தை
புத்தகங்களோடு கொண்டாடுவோம் என்ற தலைப்பில் காலை 10 மணி முதல்
இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
ஓசூர் மேயர் எஸ்.ஏ. சத்யா
காலை 10 மணி நிகழ்ச்சியில் ஓசூர் அனைத்து குடியிருப்போர்
நலச்சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர்
ஆர். நீலகண்டன் தலைமை வகித்தார்.
ஓசூர் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர்
இரா.பாரதிதாசன், ஓசூர் ஸ்ரீஅகத்தியர்
வீர சிலம்பம் நிறுவனர் டி.ஆர்.பிரேம்குமார்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓசூர் தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர்
ப.சண்முகம் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக
ஓசூர் மேயர் எஸ்.ஏ. சத்யா பங்கேற்று
புத்தக அரங்கை துவக்கி வைத்தார்.
பொன் விழா சமூகசேவகர்
அரிமா டாக்டர். ஒய்விஎஸ்.ரெட்டி
புத்தக விற்பனையை துவக்கி வைத்தார்.
மாலை 5 மணிக்கு
ஓசூர் புத்தகத் திருவிழா தலைவர்
ஆடிட்டர் பாலசுந்தரம் தலைமையில்
14-வது புத்தகத் திருவிழாவின்
2025 ஆண்டின் புத்தக சேமிப்பு உண்டியல் பை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த புத்தக அரங்கில்
நம்மோடு எழுத்தாளர்களான…..
பாவலர். கருமலைத் தமிழாழன்
எழுத்தாளர் கமலாயன்
எழுத்தாளர் ரமேஷ் கல்யாண்
ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட
செயற்குழு உறுப்பினர்
பி. முருகேச பாண்டியன்
நன்றியுரையாற்றினார்.
இந்த நிகழ்வில் ஓசூர் தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் நிர்வாகிகள்
முனைவர் சேதுராமன், சிவக்குமார்,
பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.