ஸ்ரீ ஐயப்ப சுவாமி 17ஆம் ஆண்டு
மண்டல பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம்
ஸ்ரீசித்தலிங்கேஸ்வரர் சுவாமி கோயிலில்
17ஆம் ஆண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமி
மண்டல பூஜை.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற
பிரம்மாண்ட பால்குட ஊர்வலம்.
ஓசூர். டிச. 31. -
ஸ்ரீ சித்தலிங்கேஸ்வரர் சுவாமி
திருக்கோயில்
கெலமங்கலம் பகுதியில் அமைந்துள்ள
பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் 17-ஆம் ஆண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமி மண்டல பூஜை மற்றும் பல்லக்கு உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
17-ம் ஆண்டு ஐயப்பசுவாமி
மண்டல பூஜை
டிச.28-ம் தேதி காலை மகா கணபதி
ஹோமங்களுடன் துவங்கிய இந்த வைபவத்தில்,
மூலவர் சுவாமிக்கு வேத பண்டிதர்கள்
வேதங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள்
மற்றும் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள்
நடைபெற்றன.
பல்லக்கு உற்சவம்
தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வினியோகம் நடந்ததது.
அடுத்து ஸ்ரீ சித்தலிங்கேஸ்வர சுவாமி ஸ்ரீ ஐயப்ப சுவாமி பல்லக்கு உற்சவம்நடந்தது.
இதில் பெண்கள் 51 பால்குடங்கள் மற்றும் கலச ஆராதனைகள் ஆகியவற்றுடன்
செண்டை மேளம் முழங்க,
நாதஸ்வரம் வாத்தியங்களுடன்
பிரம்மாண்ட ஊர்வலம்
முக்கிய சாலைகள் வழியே வந்து
திருக்கோயிலை அடைந்தது.
மகா மங்களாரத்தி
பின்னர் சுவாமிக்கு மகா மங்களாரத்தி
ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அன்னதானம்
மண்டல பூஜையில் பங்கேற்ற
நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.
நாதஸ்வர இன்னிசை கச்சேரி
மாலை 6 மணிக்கு
நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடந்தது.
இரவு 8 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்
மற்றும் மகா மங்களாரத்தி ஆகியவற்றுடன்
தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
பூஜை ஏற்பாடுகளை,
ஸ்ரீ ஐயப்ப சுவாமி பக்த மண்டலி
மற்றும் ஊர் பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
--------------------------------.