கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
நட்சத்திரா குடியிருப்பு
(NACHATRA HOMES)
குடும்ப விழா
மற்றும்
77-வது குடியரசு தினவிழா
கோலாகலமாக
கொண்டாட்டம்
ஓசூர். ஜன. 26. –
நட்சத்திரா குடியிருப்பு
(NACHATRA HOMES)
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
நட்சத்திரா குடியிருப்பு வளாகத்தில்
ஜனவரி 25-ம் தேதியன்று
குடும்ப விழாவும்
மற்றும்
ஜனவரி 26-ம் தேதியன்று
77-வது குடியரசு தினவிழா
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நட்சத்திரா ஹோம்ஸ்
உரிமையாளர்கள்
குடியிருப்போர் நலச்சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
தோனி சிபிஎஸ்இ பள்ளி அருகே
நட்சத்திரா குடியிருப்பு அமைந்துள்ளது.
இந்த குடியிருப்பில் உள்ள
125 வீடுகளில்
இந்தியாவின் அனைத்து
மாநில மக்களும் வசித்து
வருகின்றனர்.
இந்த நட்சத்திரா குடியிருப்பில்
தமிழ்,
கன்னடம்,
தெலுங்கு,
மலையாளம்,
இந்தி,
என பன்மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வசித்து வருவதால்,
இந்திய நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக
நட்சத்திரா குடியிருப்பு திகழ்கிறது.
இந்த நட்சத்திரா ஹோம்ஸ் – ல் உரிமையாளர்கள் குடியிருப்போர் நலச்சங்கம் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும்
இந்திய நாட்டின்
குடியரசு தின விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல நட்சத்திரா குடியிருப்பில்
2026-ம் ஆண்டு
ஜனவரி 25-ம் தேதியன்று
குடும்ப விழாவும்
ஜனவரி 26-ம் தேதியன்று
77-வது குடியரசு தினவிழாவும்
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நட்சத்திரா குடியிருப்பு
குடும்ப விழா
இந்த விழாவுக்கு
குடியிருப்போர் நலச்சங்க தலைவர்
திரு. ராஜாராம்,
தலைமை வகித்தார்.
துணைத்தலைவர்
திரு. சரவணன்,
பொருளாளர்
திரு. இம்மானுவேல்
செயலாளர்
திரு. ஸ்ரீஷா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக
ஒசூர் ஹட்கோ
காவல் நிலைய ஆய்வாளர்
திரு. முத்து கிருஷ்ணன்.
அவர்கள்
பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவில் சங்க நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள்.
குடும்ப விழாவில்
விளையாட்டு போட்டிகள்,
நடனம்
உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிறுவர் சிறுமியர்கள் மற்றும்
பெற்றோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
சிறுவர், சிறுமிகளுக்கு
நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
அறுசுவை உணவு
அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
77-வது குடியரசு தினவிழா
நட்சத்திரா குடியிருப்பில்
ஜனவரி 26-ம் தேதியன்று
77-வது குடியரசு தினவிழா
இறை வணக்கத்துடன் தொடங்கியது.
இந்த விழாவுக்கு
குடியிருப்போர் நலச்சங்க தலைவர்
திரு. ராஜாராம்,
தலைமை வகித்தார்.
துணைத்தலைவர்
திரு. சரவணன்,
பொருளாளர்
திரு. இம்மானுவேல்
செயலாளர்
திரு. ஸ்ரீஷா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர்
திரு. இம்மானுவேல்
தேசியக்கொடி ஏற்றினார்.
விழாவில் சங்க நிர்வாகிகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும்
இனிப்பு வழங்கப்பட்டது.
இறுதியில் தேசிய கீதம் பாடி
விழா நிறைவு பெற்றது.
விழா நிகழ்ச்சிகளை
சீரும் சிறப்புமாக நடத்தி கொடுத்த
திருமதி. பவித்ரா,
திருமதி. கற்பக செல்வி.
திருமதி. செல்வராணி,
திருமதி. ஷிபா
ஆகியோருக்கு
நட்சத்திரா ஹோம்ஸ் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு விழாக்களிலும்
நட்சத்திரா குடியிருப்பில்
வசிக்கும் மக்கள்
தங்கள் குழந்தைகளுடன்
பங்கேற்று சிறப்பித்தனர்.
----------------------------.