கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி, சிப்காட்
சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம்
கட்டுமான பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை
அவர்கள்,
ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
ஓசூர். அக். 8. -
ஓசூர் மாநகராட்சி - சிப்காட் -
சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம்
ஒசூர் மாநகராட்சி, சிப்காட் பகுதியில்
கட்டப்பட்டு வரும்
உயர் மட்ட மேம்பால பணிகள்
தீபாவளி பண்டிகைக்குள்
முடித்து பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு
கொண்டு வர வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, சிப்காட் சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் கட்டுமான
பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை அவர்கள,
ஆகியோர் அக்டோபர் 8-ம் தேதியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி - பெங்களுர்
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிச்சலை குறைக்கும் பொருட்டு
5 இடங்களில் உயர் மட்ட மேம்பாலம் பணிகள் நடைபெற்று வந்தது.
அவற்றில் முதல் கட்டமாக
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி,
மேலுமலை,
சாமல்பள்ளம்
ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும்
3 மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு
போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது
காமன்தொட்டி,
ஒசூர் சிப்காட் பகுதி
ஆகிய இரண்டு இடங்களில் உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இன்று சிப்காட் பகுதியில் கட்டப்பட்டு வரும்
மேம்பால பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எதிர் வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு
ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல
இச்சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது
சொந்த ஊருக்கு செல்லவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிப்காட் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.
மீதம் உள்ள பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது
ஓசூர் மாநகராட்சி ஆணையர்
திரு.சபீர் முகம்மது ஆலம் இ.ஆ.ப.,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்
திரு. அக்ஷய் அனில் வாகாரே இ.கா.ப.,
திரு.சங்கர்,
தேசிய நெஞ்சாலை திட்ட அலுவலர்
திரு.ரமேஷ்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
----------------------------------------.