ஓசூர் வட்டாரத்தில்
உலக மண் வள தினம்
கொண்டாட்டம்
ஓசூர். டிச. 06. –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில்
மண் வளம், மண் பரிசோதனை மற்றும் மண் வள அட்டையின் முக்கியத்துவம் என்ற கருத்தை வலியுறுத்தி மண் வள தினம் கொண்டாடப்பட்டது.
உலக மண் வள தினம்
ஓசூர் வட்டார சித்தனப்பள்ளி கிராமத்தில்
டிசம்பர் 5-ம் தேதியன்று உலக மண்வள தினம்
கொண்டாட்டம் மற்றும் விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த பயிற்சி முகாம்
நடைபெற்றது.
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.புவனேஸ்வரி
இந்த நிகழ்வில் ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.புவனேஸ்வரி தலைமை வகித்து பேசும் போது, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்
மாதம் 5-ம் தேதியன்று உலக மண்வள தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது என்றும், மண் வளத்தை காப்பதற்கான வழிமுறைகள்
மற்றும் மண் மாதிரி ஆய்வின்படி நிலத்தில்
இடுபொருட்கள் பயன்படுத்துவது குறித்தும்,
மண் மாதிரி சேகரித்தல் மற்றும் ஆய்வின்
பயன்பாடு குறித்தும், விவசாயிகளுக்கு விளக்கமாக
எடுத்துரைத்தார்.
உயிர் உரங்களின் முக்கியத்துவம்
ஓசூர் வேளாண்மை அலுவலர் த.ரேணுகா, உயிர் உரங்களின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றை
பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் நன்மை செய்யும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து
மண் வளம் பாதுகாக்கப்படுகிறது என மண் வள
மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு விவரமாக எடுத்துக் கூறினார்.
மண்புழு உரம் தயாரிப்பு, பயன்கள்
அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி
பாரத்குமார், இயற்கை உரங்களான மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் பயன்கள் குறித்தும், பசுந்தழை
உரங்கள், பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவதன்
மூலம் மண்ணில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும்,
அதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்தும் தொழில் நுட்ப உத்திகள் பற்றியும், விவசாயிகளுக்கு விளக்கமாக விவரித்தார்.
வேளாண் பொறியியல் துறையில்
மானிய திட்டங்கள்
ஓசூர் வேளாண் பொறியாளர் கார்த்திகேயன், வேளாண் பொறியியல் துறையில் செயல்பட்டு வரும் மானிய திட்டங்கள் பற்றியும், அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கும் வழிமுறைகள் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும், விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.
உழவன் செயலியின்
முக்கியத்துவம்
நுண்ணூட்ட உரங்களின்
முக்கியத்துவம்
நந்திமங்கலம் உதவி வேளாண்மை அலுவலர்
கோவிந்தசாமி, உழவன் செயலியின் முக்கியத்துவம் பற்றியும், நுண்ணூட்ட உரங்களின்
முக்கியத்துவம் பற்றியும், விவசாயிகளுக்கு விளக்கினார்.
வேஸ்ட் டிகம்போஸ்டர்
அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் சோ.சுகுணா, மண் வளத்தை மேம்படுத்த
வேஸ்ட் டிகம்போஸ்டர் தயாரிப்பு மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் மற்றும் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு தெளிவாக
விளக்கமளித்தார்.
மண்வள அட்டைகள்
இந்த பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு
வேளாண்மை உதவி இயக்குநர் அ.புவனேஸ்வரி,
மண்வள அட்டைகளை வழங்கினார். பின்பு மண்வள வேளாண்மைக்கான துண்டு பிரசுரங்கள்
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் 50-க்கும் அதிகமான விவசாயிகள்
கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சண்முகம் செய்திருந்தார்.