ஓசூர் சூடுகொண்டப்பள்ளியில்
விவசாயிகளுக்கு
ரபி பருவ கிராம வேளாண்
முன்னேற்ற குழு பயிற்சி
ஓசூர். நவ. 25. –
by Jothi Ravisugumar
கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கினைந்த
வேளாண் வளர்ச்சித் திட்டம்
ஓசூர் வட்டாரத்தில் உள்ள
விவசாயிகளுக்கு மாநில விரிவாக்க
உறுதுணை சீரமைப்பு (அட்மா)
திட்டத்தின் கீழ் கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கினைந்த
வேளாண் வளர்ச்சித் திட்டத்தில்
பலவனப்பள்ளி ஊராட்சியில் உள்ள
அனைத்து சமூக நிலை
வேளாண் உழவர்களைக் கொண்டு
சூடுகொண்டனப்பள்ளி கிராம
வேளாண் முன்னேற்றக் குழு
பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சி
முகாமுக்கு
வேளாண்மை உதவி இயக்குநர்
அ. புவனேஸ்வரி தலைமை
வகித்து பேசினார்.
கொள்ளு, கேழ்வரகு
சாகுபடிதொழில் நுட்பங்கள்
அப்போது ரபி பருவத்தில்
பயிரிடும் கொள்ளு, கேழ்வரகு
சாகுபடிதொழில் நுட்பங்கள்
குறித்தும், கலைஞரின்
அனைத்து கிராம
ஒருங்கினைந்த வேளாண்
வளர்ச்சி திட்டம் குறித்தும்,
இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்
முக்கிய திட்டங்களான
மாநில வேளாண் வளர்ச்சி திட்டம்,
விதைப் பண்ணை பயன்கள்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து
மன்னுயிர் காப்போம் திட்டத்தின்,
பயன்கள் மற்றும் மானிய
விவரங்கள் குறித்தும்,
விதைப் பண்ணை அமைப்பதின்
பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு
புரியும் வகையில் விளக்கி கூறினார்.
சூரிய விளக்கு பொறி
பயன்பாடு
அதியமான் வேளாண் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
உதவி பேராசிரியர் ஏழுமலை,
துவரை பயிரில் இயற்கை
முறையில் பூச்சி மற்றும் நோய்
கட்டுப் படுத்தும் தொழில்நுட்ப
முறைகள் பற்றியும்,
சூரிய விளக்கு பொறி பயன்பாடு,
பயன் படுத்தும் முறைகள்,
பயன்கள் குறித்தும்,
மண்ணினால் ஏற்படும் பூஞ்சாண்
நோய்களை கட்டுப்படுத்தும்
தொழில் நுட்ப முறைகள்
பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமாக
எடுத்துரைத்தார்.
நுண்ணூட்ட உரங்களின்
முக்கியத்துவம்
ஓசூர், துணை வேளாண்மை
அலுவலர் எம்.முருகேசன்,
உயிர் உரங்கள், சூடோமோனாஸ்,
நுண்ணூட்ட உரங்களின்
முக்கியத்துவம் மற்றும்
பயன்கள் பற்றியும்,
வேளாண்மைத் துறையில்
செயல்படுத்தப் படும்
மானிய திட்டங்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு
விரிவாக விளக்கினார்.
இயற்கை விவசாயத்தின்
முக்கியத்துவம்
நல்லூர் உதவி வேளாண்மை
அலுவலர் கோவிந்தசாமி,
இயற்கை விவசாயத்தின்
முக்கியத்துவம் மற்றும்
பயன்கள் பற்றியும்,
மண்புழு உரங்கள் தயாரிப்பு முறைகள்
பற்றியும், பயிர் காப்பீட்டு திட்டத்தின்
பயன்கள் பற்றியும் மற்றும் பண்ணைக்
கழிவுகளை உரமாக்கும் தொழில் நுட்ப
முறைகள் பற்றியும் விவரமாக கூறினார்.
உழவர் செயலி முக்கியத்துவம்
அட்மா வட்டார தொழில் நுட்ப
மேலாளர் சோ.சுகுணா,
வேஸ்ட் டிகம்போஸ்டர்
தயாரிப்பு மற்றும் பயன்கள் பற்றியும்,
அட்மா திட்டத்தின் பயன்பாடுகள் மற்றும்
செயல் விளக்கங்கள் பற்றியும், உழவர்
செயலி முக்கியத்துவம், பயன்படுத்தும்
முறைகள் பற்றி விவசாயிகளுக்கு செயல்
விளக்கத்துடன் பயிற்சி
அளித்தார். இதில்
50 விவசாயிகள் பங்கேற்று
பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி
தொழில் நுட்ப மேலாளர் சண்முகம்
செய்திருந்தார்.