கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி
சமத்துவபுரம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
ஆண்டு விழா கொண்டாட்டம்
ஓசூர் வட்டார கல்வி அலுவலர்கள்
பங்கேற்பு
ஓசூர். பிப். 20. –
சமத்துவபுரம் தொடக்கப்பள்ளி
ஓசூர் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தரமான கல்வி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில்
எல்கேஜி வகுப்பு முதல்
5 - வது வகுப்பு வரை
290 மாணவ, மாணவிகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கல்வி பயின்று வருகின்றனர்.
ஒரு தலைமையாசிரியர் உட்பட 9 ஆசிரியர்கள் மூலமாக. மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன், தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
இந்த அரசுப்பள்ளியை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்தினர் தத்து எடுத்துக் கொண்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக இந்த அரசுப்பள்ளி, தனியார் பள்ளிக்கு நிகராக வளர்ச்சி பெற்றுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்றுள்ள இந்த அரசுப்பள்ளியின் ஆண்டுவிழா பிப்ரவரி 20-ம் தேதி மதியம் 2 மணிக்கு கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை
ஓசூர் வட்டார கல்வி அலுவலர்
சதீஷ்குமார்
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர்
அன்னய்யா,
ஆசிரியர் பயிற்றுநர்
ரமேஷ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்
ஆர். நாமகிரி
வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற
ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. மகேந்திரன்,
செயல் திட்ட தலைவர்
அரிமா. ரவிசங்கர்,
மற்றும்
மேக்னம் அரிமா சங்க
முன்னாள் தலைவர்களுக்கு
சமத்துவபுரம் அரசு தொடக்கப்பள்ளிக்கு ஆற்றி வரும் சேவையை பாராட்டி, வட்டார கல்வி அலுவலர்கள், பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
ஓசூர் வட்டார கல்வி அலுவலர்
சதீஷ்குமார் பேசியதாவது,
செல்போன் கொடுக்க வேண்டாம்
பள்ளி ஆண்டு விழாவின் நோக்கம், மாணவர்களின் திறமையை கண்டறிய வாய்ப்பு ஏற்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தினமும் தவறாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளிடம் செல்போன்
கொடுக்க வேண்டாம்.
நல்ல ஒழுக்கத்துடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வட்டார கல்வி அலுவலர்
அன்னய்யா பேசியதாவது
மறைந்த ஆசிரியை ஸ்ரீதேவி
இந்த அரசுப்பள்ளியின் மேடையை பார்க்கும் போது, எனக்கு இந்தப்பள்ளியில் பணியாற்றி, மறைந்த
ஆசிரியை ஸ்ரீதேவி தான் நினைவுக்கு வருகிறார்.
மவுன அஞ்சலி
இந்தப்பள்ளியின் வளர்ச்சிக்கு அவர் பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார்.
மறைந்த ஆசிரியை ஸ்ரீதேவியின்
நினைவாக நாம் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார்.
அதைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
மேக்னம் அரிமா சங்க
சேவைக்கு பாராட்டு
தொடர்ந்து அவர் பேசும் போது, சமத்துவபுரம் தொடக்கப்பள்ளியின் வளர்ச்சிக்கு, ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்தினர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். அவர்களை பாராட்டுகிறேன்.
“உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள்
அரசுப்பள்ளியில் படித்தவர்களே”
அரசுப்பதவியில் உள்ளவர்கள் எல்லாம், அரசுப்பள்ளியில் படித்து தான் உயர் அதிகாரிகளாக உள்ளனர். அந்த அளவுக்கு அரசுப்பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தரமான கல்வியை வழங்கி வருகின்றனர்.
திருட முடியாத
ஒரே செல்வம் கல்வி
திருடர்களால் திருட முடியாத ஒரே செல்வம் கல்வி தான். ஆகவே மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும். நல்ல இந்திய குடிமகனாக வரவேண்டும். நல்ல பதவியில் சேர வேண்டும்.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் தான் பன்முகத்திறமைகளை வளர்த்துக்கொள்ளமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆசிரியர் பயிற்றுநர்
ரமேஷ் பேசியதாவது,
கல்வி மிகப்பெரிய ஆயுதம்.
தரமான கல்வி,
சமமான கல்வி,
இந்த இரண்டும் இந்தப்பள்ளியில் உள்ளது.
இந்தப்பள்ளியை தத்து எடுத்துக் கொண்டு
சிறப்பாக வளர்ச்சிப்பணிகளை செய்து வரும் மேக்னம் அரிமா சங்கத்தினர், மற்றும் மேலாண்மைக்குழு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.
குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்
அம்மா,
இரண்டாவது ஆசிரியர் –
ஆசிரியர்.
தரமான, சமத்துவமான கல்வி இங்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து
சூடவாடி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்
பவுன் துரை,
சமத்துவபுரம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்
மாறன்,
உதவி தலைமையாசிரியர்
ராஜாராம்,
ஊராட்சி ஒன்றிய உருது பள்ளி தலைமையாசிரியர்
பரித் அக்பர்,
பஸ்தி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்(பொறுப்பு)
பர்சானா,
அந்திவாடி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்
ஸ்ரீவித்யா,
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அதைத் தொடர்ந்து
மேக்னம் அரிமா சங்கம் சார்பில் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகளின் பட்டியல் வாசிக்கப்பட்டது.
1. 2010 – 11 – சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் மற்றும் கம்யூட்டர்கள் வழங்கல்.
2. 2011 – 12 – மேடை அமைத்தல்.
3. 2012 – 13 – மேடை மேற்கூரை அமைத்தல்.
4. 2013 – 14 – கழிப்பறை பழுது மேற்கொள்ளல்.
5. 2014 – 15 – பீரோ, நூலகப்புத்தகங்கள் வைக்கும் அலமாரிகள்.
6. 2015 – 16 – வகுப்பறை டைல்ஸ் அமைத்தல்.
7. 2016 – 17 – வகுப்பறை டைல்ஸ் மற்றும் சிறுவர் பூங்கா, ஆசிரியர்கள் கழிப்பறை.
8. 2017 – 18 – நூலகப்புத்தகங்கள்.
9. 2018 – 19 – பள்ளியின் சுற்றுச்சுவர் அமைத்தல்.
10. 2019 – 20 – டி.வி.(இரண்டு).
11. 2020 – 21 – நூலகப் புத்தகங்கள்.
12. 2021 – 22 – 2022 – 23 – இல்லை(கொரானா)
13. 2023 – 24 – எல்கேஜி – யூகேஜி கட்டிடம் மறுகட்டமைப்பு.
ஆகிய வளர்ச்சிப்பணிகள் பட்டியல் வாசிக்கப்பட்டது.
விழாவில் படிப்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களை
வட்டார கல்வி அலுவலர்கள் வழங்கி பாராட்டினார்கள்.
மாணவி சுபாஷி
தாய்லாந்து நாட்டில் நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று பாராட்டு சான்றிதழ் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த 5-வது வகுப்பு
மாணவி சுபாஷி -யை
பாராட்டி கேடயம்
வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வண்ணமயமான,
நாட்டியம், நடனம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகளில், மாறுவேடம், நடனம் ஆகியவற்றில் எல்கேஜி, யூகேஜி வகுப்பு மாணவ, மாணவிகள் சிறப்பாக பங்கேற்று, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
வில்லுப்பாட்டு
குறிப்பாக, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில்
5-வது வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்று அந்தக்காலம் – இந்தக்காலம்
என்ற தலைப்பில் நகைச்சுவையாகவும், சிந்தனையை தூண்டும் வகையிலும் பேசி அனைவரையும் கவர்ந்தனர்.
மேலும் பாரம்பரிய கிராமிய நடனம்,
இயற்கை வளம் பாதுகாப்பு விழிப்புணர்வு நடனம், நவீன நடனம்
என அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும்
மாணவ, மாணவிகள் சிறப்பாக
பங்கேற்று பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
அனைத்து கலை நிகழ்ச்சிகளும் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது,
பாராட்டுக்குரியது.
இந்த ஆண்டு விழாவில்
நல்லூர் தலைவர் வீரபத்ரப்பா,
3-வது வார்டு கவுன்சிலர்
கோபாலப்பா,
கவுன்சிலர்
கவிதா சினீவாசன்,
வார்டு உறுப்பினர்
ஏ. கலைச்செழியன்,
பள்ளி மேலாண்மைக்குழு
தலைவி ஆனந்தி,
மற்றும் சமத்துவபுரம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் பெற்றோர்,
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
------------------------------------------------.