கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
22-வது வார்டில்
உயர்மின் விளக்கு கோபுரம் அமைக்க
இடம் தேர்வு செய்யாத கமிஷனர் -
மக்கள் முன்னிலையில் தெரிவித்த
எம்.பி. கோபிநாத்
ஓசூர். அக். 29. -
ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் பொதுமக்களின் சேவைகளை மேம்படுத்தும் வகையில் வார்டுதோறும் இரு நாட்கள் சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றது.
22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அந்த வார்டு
கவுன்சிலரும்,
மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான
என்.எஸ். மாதேஸ்வரன்
தலைமையில் கூட்டம் நடந்தது.
உதவி கமிஷனர்
நாராயணன்,
உதவி பொறியாளர்கள்
அருண் பிரதாப்,
பிரபாகரன்,
கோவிந்தராஜ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில்
சாலை, தெருவிளக்கு,
சாக்கடை கால்வாய்,
குடிநீர், மழைநீர் வடிகால்,
திடக்கழிவு மேலாண்மை
உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டு முனீஸ்வர் நகர், சிவக்குமார் நகர், ஆதவன் நகர், அக்ஷயா ஹோம்ஸ், தேவி நகர், சாய் லே அவுட், பூஞ்சோலை நகர் குடியிருப்பு சங்கங்கள் சார்பில் மக்கள் மனு வழங்கினர்.
உயர்மின் விளக்கு கோபுரம்
அப்போது எம்.பி., நிதியிலிருந்து உயர்மின் விளக்கு அமைக்க வேண்டும் என,
கவுன்சிலர் மாதேஸ்வரன்
அவர்களிடம்
22-வது வார்டு மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனால் கவுன்சிலர் மாதேஸ்வரன் அவர்கள் கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் அவர்களுக்கு போன் செய்து பேசினார்.
அப்போது பேசிய எம்.பி. 22 - வது வார்டில் உயர்மின் விளக்கு கோபுரம் அமைக்க மாநகராட்சியில் கடிதம் கொடுத்து 3 மாதம் ஆகிறது.
கமிஷனர் ஆய்வு செய்து இன்னும் இடத்தை தேர்வு செய்து வழங்கவில்லை என தெரிவித்தார்.
இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த
மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் உயர்மின் விளக்கு கோபுரம் அமைக்க கமிஷனர் உடனடியாக இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
----------------------------.