பழங்குடியினர் நலத்துறை சார்பாக
கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி வட்டம்
நரிகம் ஊராட்சியில்
வனத்துறை உரிமைச் சட்டம் 2006 –
கிராமசபைகளை வலிமை படுத்துவதற்கான
பயிற்சி முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை
ஓசூர். நவ. 13. –
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம்,
நரிகம் ஊராட்சி, கரியசந்திரம் கிராமத்தில்
பழங்குடியினர் நலத்துறை சார்பாக
வனத்துறை உரிமைச் சட்டம் 2006 -
கிராமசபைகளை வலிமை படுத்துவதற்கான
பயிற்சி முகாம் நடைபெற்றது.
நவம்பர் 13-ம் தேதி நடந்த இந்த முகாமை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
வனஉரிமை சட்டம் 2006-ன்படி
வனநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும்
பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும்
மக்களின் காடுகள் மீதான உரிமைகளை
பாதுகாக்கவும்,
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்
சில குறிப்பிட்ட உரிமைகளான
வனநிலங்களில் வசிப்பிட உரிமை,
விவசாயம் செய்யும் உரிமை,
வனங்களில் சிறுவன மகசூல்களை பெறும் உரிமைகள்
வழங்கப்பட்டுள்ளது.
வன உரிமைக்குழு
(Forest Right Committee)
(கிராமசபா),
உட்கோட்ட அளவிலான குழு
(Sub divisional level committee),
மாவட்ட அளவிலான குழு
(District Level Committee)
ஆகிய வன உரிமை சட்டம் 2006
வழிமுறைகள் மூலம்
உரிமையை பெற்றுத்தரலாம்.
மேலும், வனஉரிமைச் சட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சட்டத்தின் முழுப் பெயர் -
“பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகள் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும்) சட்டம் 2006” ஆகும்.
மேலும், 2005 டிசம்பர் 13ம் தேதிக்கு முன்பாக காடுகளில் வசிக்கும், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.
நாம் வனப்பகுதி மற்றும் காட்டை ஒட்டி வாழ்கின்றோம் என்றால் சில வனஉரிமைகள் இருக்கிறது.
வனஉரிமையை நாம் எப்படி பெறவேண்டும்
என்பதற்காக தான் இப்பயிற்சி
இன்று நடைபெறுகிறது.
மேலும்,
ஒரு காட்டில் வாழும் பூர்வகுடியினர்கள் வனத்தில் எந்த தவறும் நடக்காதவாறு பாதுகாக்கின்றனர்.
வனத்தில் தவறு நடக்கும் பட்சத்தில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால் மக்களும் காடுகள் ஒன்றினைக்கும் வகையில் வனஉரிமை சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வனஉரிமைகள்
மேலும், பல்வேறு வகையான வனஉரிமைகள் பெறுவதற்கு 2005 முன் வனபகுதிகளில் வாழ்ந்ததற்கான சான்றிதழ்கள் இருந்தால் போதும்.
அதாவது,
குடும்ப அட்டை,
வாக்காளர் அடையாள அட்டை,
100 நாள் வேலை திட்ட அட்டை,
பத்திரபதிவுகள் சான்றிதழ்கள்
இருந்தாலே வனஉரிமைகள் உங்களுக்கு வழுங்குவார்கள்.
வனஉரிமை என்பது
பட்டா பெறுவதற்கு சமமமானது.
ஆனால்
வனஉரிமையை விற்க முடியாது.
உங்கள் சந்ததியினர்களுக்கு மட்டுமே மாறும்.
வனஉரிமை இருந்தால் குடியிருப்புகளில் வீடுகட்டி கொள்ளலாம்.
ஏற்கனவே கூரை, சிமெண்ட் சீட்டுகள் கொண்ட வீடு கட்டி இருந்தால் தற்போது அரசு வீடு கட்டுவதற்கு
பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ்
மலை பகுதியாக இருந்தால்
ரூ.5.83 லட்சம் மதிப்பிலும்,
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்
ரூ.3.70 லட்சம் மதிப்பில்
வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
ஏற்கனவே தொகுப்பு வீடுகள் கட்டி பழுதடைந்த நிலையில் இருந்தால்
முதலமைச்சரின் வீடு
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ்
ரூ.2.70 லட்சம் மதிப்பில் பழுது பார்த்து தரப்படுகிறது.
உங்களிடம் வனஉரிமை இருந்தால் தான் இதுபோன்ற திட்டங்கள் கிடைக்கும்.
அதேபோல வனப்பகுதியில் உழவு மேற்கொண்டிருந்தால் வனஉரிமை கிடைக்கும்.
காடுகளில் விளையும் பொருட்களின் உரிமையும் கிடைக்கும்.
இந்த மாதிரியான வனஉரிமைகளை உங்களிடம்
கொண்டு சேர்க்க
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
மாவட்டந்தோறும்
வனஉரிமை குழு
அமைத்துள்ளார்கள்.
நமது மாவட்டத்தில் 314 இடங்களில் பழங்குடியின
மக்கள் காடு மற்றும் காட்டையொட்டி
வாழ்கிறார்கள் என்பது
கண்டறியப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்திற்கு வருகை தந்த குழுவினர் இப்பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து 1200 மனுக்கள் பெற்றுள்ளனர்.
கிராம சபையில் வனஉரிமைக்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினர் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து மாவட்ட அளவிளான குழுவிற்கு பரிந்துரைசெய்வார்கள்.
தற்போது
117 நபர்களுக்கு வனஉரிமை
வழங்கப்படவுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் அவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளும் எடுத்துக்கொண்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி
உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள
தொழுவபெட்டா,
பேளூர்,
போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு
வனத்துறை அனுமதியோடு விரைவில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்படவுள்ளது.
மணிமாலை அங்காடி
நமது மாவட்டத்தில்
நறிகுறவர் இன மக்கள்
மணி மாலைகள்
நன்றாக செய்து வருகிறார்கள்.
மணிமாலை விற்பனை செய்ய கிருஷ்ணகிரி
பேருந்து நிலையம் அருகில் அங்காடி வேண்டும்
என்று கோரிக்கை வைத்தனர்.
நீங்கள் வருகை தரும் பட்சத்தில் உடனடியாக குறைந்த வாடகையில் கடை ஒதுக்கீடு செய்யப்படும்.
கலைஞர் கைவினை திட்டம்
ஏற்கனவே நறிகுறவர் இன மக்களுக்கு கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொல்குடி திட்டத்தின் கீழ் நமக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கிறார்கள்.
எனவே அரசு உங்களுக்கு எல்லா வகையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கிறது.
நீங்கள் உங்கள் குழந்தைகளை நல்ல கல்வி கற்க வைத்து உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
திருமதி. கவிதா,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.சிவக்குமார்,
மாநில தலைமை பயிற்றுனர்
திரு.ராஜன்,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திரு.கார்த்தி,
வனவர்
திரு.பழனி,
முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்
திரு.நாகேஷ்,
உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
--------------------------------.