ஓசூர் மாநகராட்சியின்
14-வது வார்டில்
துணை முதல்வர் உதயநிதி
ஸ்டாலின் பிறந்தநாள் விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேயர் பங்கேற்பு
ஓசூர். நவ. 27. –
by Jothi Ravisugumar
14-வது வார்டில் கொண்டாட்டம்
ஓசூர் மாநகர திமுக சார்பில் மாநகராட்சியில் உள்ள 14-வது வார்டில் திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புதிய திமுக கொடியேற்றம்
ஓசூர் மாநகராட்சி, வடக்கு பகுதி 14-வது வார்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த வார்டில் வட்ட கழக சார்பில் ஈஸ்வர் நகர் பகுதியில் வட்டகழக செயலாளர் எம்.சேகர் ஏற்பாட்டின்படி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி புதிய திமுக கொடியை தலைமை செயற்குழு உறுப்பினர்
எல்லோரா மணி ஏற்றினார்.
அன்னதானம்
மேயர் எஸ்.ஏ.சத்யா
இந்த விழாவில் மேயர் எஸ்.ஏ.சத்யா பங்கேற்று, பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்க அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பகுதி கழக செயலாளர் வெங்கடேஷ் இனிப்பு வழங்கினார்.
இந்த பிறந்தநாள் விழாவில் மாநகர மண்டல தலைவர் ரவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் நவீன், வார்டு கழக நிர்வாகிகள் தங்கவேல், சரவணன், சத்யன், பன்னீர்செல்வம், குமார், கார்த்தி, லட்சுமி நாராயணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.