ஒசூர் பேடரப்பள்ளி
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
77 -வது குடியரசு தினவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
77 - வது குடியரசு தின விழா
கொண்டாட்டம்
பேச்சுப்போட்டி
விளையாட்டுப்போட்டி
கலைநிகழ்ச்சிகளில்
உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்
பரிசுகள் சான்றிதழ்கள்
வழங்கி பாராட்டு.
ஓசூர். ஜன. 26. -
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
பேடரப்பள்ளி மாநகராட்சி
நடுநிலைப் பள்ளியில்
77-வது குடியரசு தினவிழா
சிறப்பாக நடைபெற்றது
மாவட்டத்தில்
சிறந்த அரசுப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேடரப்பள்ளி, 3-வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில்1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை 900 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
தரமான கல்வி
இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனால் இந்த அரசுப்பள்ளி
மாவட்டத்தில் உள்ள
சிறந்த அரசுப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது.
77-வது குடியரசு தினவிழா
இந்த அரசு நடுநிலைப்பள்ளியில்
2026-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி
77-வது குடியரசு தினவிழா
சிறப்பாக நடைபெற்றது.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு
பள்ளி அரங்கில்
மகாத்மா காந்தி உருவப்படம் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தலைமையாசிரியர்
திரு. பொன் நாகேஷ்.
தலைமை வகித்து
அனைவரையும் வரவேற்றார்.
குடியரசு தினவிழாவில்
பேடரப்பள்ளி 3-வது வார்டு
கவுன்சிலர்
திரு. ரஜினிகாந்த்
அவர்கள் சிறப்பு விருந்தினராக
பங்கேற்று குத்துவிளக்கேற்றி,
தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற
பேச்சுப் போட்டி,
விளையாட்டுப்போட்டி
கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றது.
பரிசுகள்
சான்றிதழ்கள்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற
சுமார் 50 மாணவ, மாணவிகளுக்கும்,
கலைநிகழ்ச்சிகள் மற்றும்
பேச்சுப்போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும்
பாராட்டி பரிசுகள், சான்றிதழ்கள்
வழங்கப்பட்டது.
குடியரசு தினவிழாவில்
பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து
திரு. லக்கப்பா,
திரு. ரமேஷ்,
திரு. செல்லப்பா,
திரு. சுந்தரமூர்த்தி,
திரு. ரவி,
பள்ளி மேலாண்மை குழுவிலிருந்து
திருமதி. விஜி,
திரு. விஜய்,
திருமதி. சுகன்யா,
திரு. நாராயணரெட்டி,
திரு. சரவணன்,
திரு. ரவி,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
77-வது குடியரசு தினவிழா ஏற்பாடுகளை
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்.
சிறப்பாக செய்திருந்தார்.
இந்த விழாவில் பெற்றோர்,
முன்னாள் மாணவர்கள்,
ஆசிரியர்கள்,
இல்லம் தேடி கல்வி குழுவினர்,
கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை
பாராட்டி வாழ்த்தினார்கள்.
--------------------------.