ஓசூரில் ஐஎன்டியூசி மற்றும்
காங்கிரஸ் சார்பில்
முன்னாள் பிரதமர்
மன்மோகன் சிங் மறைவிற்கு
அஞ்சலி
ஓசூர். டிச. 27. –
ஓசூர் மாநகராட்சியில் ஐஎன்டியூசி மற்றும் காங்கிரஸ் சார்பில்
முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்(92), உடல் நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஓசூரில் ஐஎன்டியூசி மற்றும் காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது.
ஐஎன்டியூசி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஐஎன்டியூசி சார்பில் முன்னாள் பிரமதர் மன்மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள
ஐஎன்டியூசி அலுவலக வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி தேசிய கமிட்டி துணைத்தலைவருமான கே.ஏ.மனோகரன் தலைமை வகித்து மன்மோகன்சிங் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து,
மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து 2 நிமிடம்
மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில்
ஐஎன்டியூசி மாவட்ட துணைத்தலைவர்
முனிராஜ், காங்கிரஸ் மாவட்ட கமிட்டி துணைத்தலைவர் சத்தியமூர்த்தி,
அதிமுக எம்ஜிஆர் ரசிகர் மன்ற செயலாளர்
ஜெ.பி. என்கிற ஜெயபிரகாஷ்,
பத்தலப்பள்ளி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோபால், காங்கிரஸ் பிரமுகர்
வீரமுனிராஜ், ஐஎன்டியூசி பரமானந்தபிரசாத்,
ஐஎன்டியூசி செல்வம் மற்றும் ஐஎன்டியூசி, காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஓசூர் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்றது. இதில்
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்து,
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து,
மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி
மைஜா அக்பர், ஓசூர் மாநகர செயலாளர் தியாகராஜன், காங்கிரஸ் பிரமுகர்கள் சிவப்பாரெட்டி, முத்தப்பா, சரோஜம்மா,
கீர்த்திகணேஷ், இர்ஷாத் மற்றும் பலர்
கலந்து கொண்டனர்.