கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்
ரூ.73 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளையும்,
ஓசூர் மாநகராட்சி,
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி,
கெலமங்கலம் ஊராட்சி
ஒன்றிய பகுதிகளில்
ரூ.35 கோடியே 83 லட்சம் மதிப்பில்
புதிய திட்ட பணிகளை துவக்கி வைத்து,
1,263 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள் வழங்கினார்.
ஒசூர். பிப். 3. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி,
ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில்,
சமூக பொறுப்பு நிதி மூலம்
ரூ.73 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
4 கூடுதல் வகுப்பறை கட்டிடம்,
ஒசூர் மாநகராட்சி, மூக்காண்டப்பள்ளியில்
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை ஆகியவற்றை திறந்து வைத்து,
ஓசூர் மாநகராட்சி,
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி,
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்
ரூ.35 கோடியே 83 லட்சம் மதிப்பில்
தார்சாலைகள் மற்றும் சிமெண்ட சாலைகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து,
சப்தகிரி திருமண மண்டபத்தில்
1,107 பயனாளிகளுக்கும்,
சூளகிரி வட்டம், தியானதுர்க்கம் பகுதியில்
156 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் திரு.அர.சக்கரபாணி
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.ஒய்.பிரகாஷ் (ஓசூர்),
திரு.டி.ராமச்சந்திரன் (தளி),
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் முன்னிலையில்
இன்று (03.02.2026) வழங்கினார்.
மாண்புமிகு
உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் பொறுப்பேற்ற பின்பு, பள்ளிக்கல்விக்காக ஆண்டுக்கு
ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.
தமிழ்நாடு அரசால் மிக அதிகமான நிதி பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு
முதலமைச்சரின்
காலை உணவு திட்டத்தின் கீழ்,
20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு
காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதேப்போல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
6 முதல் 12 ம் வகுப்பு வரை பயின்று
உயர்கல்வி பயிலும்
12,85,000 மாணவ, மாணவிகளுக்கு
புதுமைப்பெண்
மற்றும்
தமிழ்ப்புதல்வன்
திட்டத்தின் கீழ் ரூ.1000 மாதந்தோறும்
வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
"உலகம் உங்கள் கையில்"
திட்டத்தின் கீழ் 20 லட்சம் மாணாக்கர்களுக்கு
மடிக்கணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும்,
நான் முதல்வன் திட்டத்தின் மூலம்
அதிக மாணவ, மாணவிகள்
அரசு வேலை மற்றும் ஒன்றிய அரசு பணிக்கு தேர்வாகியுள்ளனர்.
ஜி.ஆர்.பி.டைரி புட்ஸ் (பி) லிமிடெட்
சமூக பொறுப்பு நிதி
ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில்,
ஜி.ஆர்.பி.டைரி புட்ஸ் (பி) லிமிடெட்
சமூக பொறுப்பு நிதி மூலம்
ரூ.73 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
4 கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பள்ளிக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் 18 ஆசிரியர்களை புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே, மாணவச் செல்வங்கள்
படிக்கும் காலத்தில்
உயரிய குறிக்கோளுடனும்,
ஒழுக்கத்துடனும்,
தன்னம்பிக்கை
விடாமுயற்சியோடும்,
கடின உழைப்போடும்
படித்து வாழ்க்கையில் உயர வேண்டும்.
எண்ணங்கள் வானத்தை தொடும்
அளவிற்கு இருக்க வேண்டும்.
மேலும்,
மாணவர்கள் படித்து தங்களது
குடும்பத்திற்கும், பெற்றோர்களுக்கும்,
ஆசிரிய பெருமக்களுக்கும்,
பள்ளிக்கும், சமுதயாத்திற்கும்
பெருமை சேர்க்க வேண்டும்.
தருமபுரி மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கி
புதிய கிளை
தொடர்ந்து, ஒசூர் மாநகராட்சி, மூக்காண்டப்பள்ளியில்
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கியின் புதிய கிளை
துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி
மாவட்டங்களை உள்ளடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்
22 கிளைகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது ஓசூரிலிருந்து பெங்களூர் செல்லும்
உள்வட்டப் புறவழிச்சாலை
(Inner Ring Road)
ESI மருத்துவமனை அருகில்,
மூக்காண்டப்பள்ளியில் தனியாருக்கு
சொந்தமான கட்டிடத்தில் இயங்க
ஏதுவாக பாதுகாப்பு பெட்டகங்கள்,
பாதுகாப்பு கதவுகள்,
வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம்
மற்றும் நவீன வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கிளையானது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கியின் 23-வது கிளை ஆகும்.
மேலும், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 45-வது கிளை ஆகும்.
இக்கிளையின் மூலம்
மூக்காண்டப்பள்ளியை சார்ந்த
பகுதி மக்கள் மற்றும் இக்கிளையுடன் இணையவுள்ள
3 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள்
என 30 -க்கும் மேற்பட்ட கிராமங்கள்,
சிப்காட்-1 மற்றும் ஓசூர் மாநகராட்சியை
சேர்ந்த 25,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவர்.
இக்கிளையில்,
இன்று சேமிப்பு கணக்கு தொடங்கிய
4 நபர்களுக்கு வங்கி பாஸ் புத்தகங்களும்,
ரூ.2,50,000 மதிப்பில் நிலையான வைப்புத்தொகை வைத்த 5 நபர்களுக்கு இட்டு வைப்புத்தொகைக்கான ஆணை மற்றும்
5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மகளிர் சிறுவணிகக்கடன்,
மகளிர் தொழில்முனைவோர் கடன்,
சிறு குறு தொழில் கடனுதவிகள்
வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஒசூர் மாநகராட்சி,
வார்டு எண் 36 விகாஸ் நகரில்,
வளர்ச்சி நிதி 2025-26 ன் கீழ்,
ரூ.31 கோடியே 97 லட்சம் மதிப்பில்
502 எண்ணிக்கையிலான தார்சாலைகள் மற்றும் சிமெண்ட சாலைகள்
மற்றும்
கலைஞர் நகர்ப்புற
மேம்பாட்டு திட்டம்
தேன்கனிக்கோட்டை
தேர்வுநிலை பேரூராட்சியில்
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு
திட்டத்தின் கீழ்,
ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பில்
வார்டு எண்.7- கீழ்க்கோட்டை முதல்
ஒசூர் மெயின் ரோடு வரை
தார்சாலை அமைக்கும் பணி மற்றும்
வார்டு எண்.8 - கித்வாய் தெரு,
வார்டு எண்.1 தளி ரோடு இந்திரா நகர் மற்றும்
மேல்கோட்டை
ஆகிய தெருக்களில் சிமெண்ட் சாலை
அமைக்கும் பணிகள்,
கெலமங்கலம் ஊராட்சி
ஒன்றியத்திற்குட்பட்ட மேலூர் வனத்துறை நாற்றங்கால் அருகில்,
மேலூர் முதல் தொலுவபெட்டா சாலை மேம்படுத்துதல் மற்றும்
மேலூர் தொலுவபெட்ட சாலை முதல்
குல்லட்டி (கவனூர்) சாலை வரை
ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில்
சாலை பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
1,107 நபர்களுக்கு
இலவச வீட்டுமனை பட்டாக்கள்
தொடர்ந்து,
தேன்கனிக்கோட்டை வட்டம்,
சப்தகிரி திருமண மண்டபத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில்,
தேன்கனிக்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட
200 நபர்கள்,
கக்கதாசம் உள்வட்டத்திற்குட்பட்ட
270 நபர்கள்,
தளி உள்வட்டத்திற்குட்பட்ட
130 நபர்கள்,
கெலமங்கலம் உள்வட்டத்திற்குட்பட்ட
53 நபர்கள்,
அந்தேவனப்பள்ளியை சேர்ந்த
347 நபர்கள்,
அஞ்செட்டி உள்வட்டத்திற்குட்பட்ட
107 நபர்கள்
என மொத்தம்
1,107 நபர்களுக்கு
இலவச வீட்டுமனை பட்டாக்கள்
வழங்கப்பட்டது.
சூளகிரி வட்டம்
இலவச வீட்டுமனை பட்டாக்கள்
மேலும், சூளகிரி வட்டத்திற்குட்பட்ட
சொக்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
12 நபர்களுக்கு
ரூ.6 லட்சம் மதிப்பிலும்,
தியானதுர்க்கம் கிராமத்தைச் சேர்ந்த
131 பயனாளிகளுக்கு
ரூ.1 கோடியே 4 லட்சத்து
97 ஆயிரத்து 380 மதிப்பிலும்,
காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த
13 பயனாளிகளுக்கு
ரூ.9 லட்சத்து 46 ஆயிரத்து 220
என மொத்தம் 156 பயனாளிகளுக்கு
ரூ.1 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரத்து 600 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
முதல்வர் மருந்தகங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
23 முதல்வர் மருந்தகங்கள்
செயல்பட்டு வருகிறது.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ்,
6,39,737 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
இன்னுயிர் காப்போம்
நம்மைக் காக்கும் 48
திட்டத்தின் கீழ்,
16,880 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
வழங்கும் திட்டத்தின் கீழ்,
3,55,197 மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ
காப்பீடு திட்டத்தின் கீழ்,
4,14,809 காப்பீட்டு அட்டைகள்
வழங்கப்பட்டுள்ளது.
1,50,000 விவசாய மின் இணைப்புகள்
வழங்கும் திட்டத்தின் கீழ்,
13,143 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத்
திட்டத்தின் கீழ்,
1,447 அரசு மற்றும்
அரசு உதவிபெறும் பள்ளிகளில்
1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும்
69,711 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ்,
35,324 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
85,711 பயனாளிகளுக்கு
இலவசமாக பட்டாக்கள்
வழங்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்,
93,295 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்,
28 முகாம்கள் மூலம் 45,136 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
முதலமைச்சரின் தாயுமானவர்
திட்டத்தின் கீழ்,
வயது முதிர்ந்தோர் மற்றும்
மாற்றுத்திறனாளிகள்
என மொத்தம் 18,513 நபர்கள்
பயனடைந்துள்ளனர்.
விடியல் பயண திட்டத்தின் கீழ்,
மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல்
பயணம் செய்து வருகின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ்,
34,164 மாணவிகளும்,
தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ்,
22,658 மாணவர்களும் பயனடைந்து
வருகின்றனர்.
"உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ்,
11,386 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ்,
1,06,705 இளைஞர்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்,
ரூ.118.83 கோடி மதிப்பீட்டில்
7,193 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு,
பணிகள் நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
40,407 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு
ரூ.3116.31 கோடி மதிப்பில்
சுய உதவிக்குழுக் கடன்
வழங்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர்
தொழில் முன்னோடிகள்
திட்டத்தின் கீழ்,
56 நபர்களுக்கு ரூ.31.61 கோடி மதிப்பில்
கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ்,
155 நபர்களுக்கு ரூ.3.52 கோடி மதிப்பில்
கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்,
41,956 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில்
திட்டத்தின் கீழ்,
3,414 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மலைக் கிராமங்களுக்கு ஏராளமான சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தளி பகுதியில் மலைவாழ் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் தேன்கனிக்கோட்டையில் புதியதாக கல்லூரி துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கடைக்கோடி மலைக்கிராமங்களுக்கும் பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப
அடிப்படை வசதிகள்
செய்து கொடுக்கப்பட்டுள்ளது என
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் திரு.அர.சக்கரபாணி
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில்,
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா,
மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
ஓசூர் வனக்கோட்ட வனப்பாதுகாவலர் (தலைமையிடம்)
திரு.பசவ் சிங்க் இ.வ.ப.,
ஒசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு.ஆனந்தய்யா,
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர்
திருமதி.மலர்விழி,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
திரு.நடராஜன்,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திரு.மதன்குமார்,
ஓசூர் மாநகராட்சி செயற்பொறியாளர்
திரு.விக்டர்,
ஜி.ஆர்.பி.டைரி புட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்
திரு.ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம்,
மாநகராட்சி கல்வி குழு தலைவர்
திரு.ஸ்ரீதரன்,
மாநகராட்சி
பொது சுகாதாரக்குழு தலைவர்
N.S.மாதேஸ்வரன்
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர்
திரு.டி.ஆர்.சீனிவாசன்,
தேன்கனிக்கோட்டை
பேரூராட்சி செயல் அலுவலர்
திரு.நாகராஜன்,
வட்டாட்சியர்கள்
திரு.குணசிவா,
செல்வி.கங்கை,
திரு.செந்தில் குமார்,
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.சீனிவாச மூர்த்தி,
திரு.முருகன்,
மண்டல குழு தலைவர்கள்
திரு.ரவி,
திரு.சென்னீரப்பா,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திரு.முருகன்,
தளி முன்னாள் ஒன்றிய குழு தலைவர்
திரு.சீனிவாசலு,
மற்றும் முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
---------------------------------------.