ஓசூர் மாநகராட்சி 4-வது வார்டு
காமராஜ் நகரில்
மகாலட்சுமி தையல் பயிற்சி
மையம் சார்பில்
சமத்துவ பொங்கல் விழா
ஓசூர். ஜனவரி. 10. -
கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு காமராஜ் நகரில் மகாலட்சுமி தையல் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில், மகளிர், தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து, பொங்கலிடும் இடத்தை வண்ண கோலமிட்டு அலங்கரித்தனர். பின்பு, பொங்கல் அடுப்பு வைத்து, பாரம்பரிய முறையில் மண்பானைகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து, பொங்கும் போது, பொங்கலோ, பொங்கல் என உற்சாகத்துடன் ஒலி எழுப்பியபடி, சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில்
மையத்தின் உரிமையாளர்
ஜீவா தலைமையில் தையல் பயிற்சி பெறும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களும் பங்கேற்றனர்.
இதில் பாமக மேற்கு மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், மற்றும் பசுமை தாயகத்தின் மாநில துணை செயலாளர் முனிசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.