தமிழ்நாடு வடக்கு மாநில
ஏ.பி.வி.எஸ் சார்பில்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்
75-வது தின விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஓசூர். நவ. 27. –
by Jothi Ravisugumar
ஏ.பி.வி.எஸ் சங்கம்
தமிழ்நாடு வடக்கு மாநில அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம்( ஏபிவிஎஸ்) சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது தின விழா கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் உள்ள விநாயகா ஹாலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு மாநில தலைவர் கே.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்
வி. ஜெயபிரகாஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மூத்த வழக்கறிஞர்களான பி. முனியப்பன் மற்றும்
எஸ். ராம்பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று அரசியலமைப்பு சட்டம் பற்றி விளக்கமாக உரையாற்றினார்கள்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் பி.ராகசுதா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ராஜேஸ்வரி, செயற்குழு உறுப்பினர்களான
கே.அண்ணாதுரை, என்.பாலாஜிகுமார், ஜெ.கிஷோர்குமார், ஆர்.சரண்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட செயலாளர் ஆர்.சிவசங்கரன் நன்றி உரையாற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை
மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.வெங்கடேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் கே.கோபிகுமார் மற்றும் அனிதா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.