வானிலை ஆய்வாளர்
”அன்னா மாணி”
1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையில் முதல் துணை இயக்குனராக ஓய்வு பெற்றார்.
அவர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவை –
1980 ல் 'The Handbook for Solar Radiation data for India
மற்றும்
1981 ல். Solar Radiation over India.
1987ல் KR ராமநாதன் பதக்கம் வென்றார்.
ஆகஸ்ட் – 23 – 1918 –
இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின்
முதல் பெண் துணை இயக்குநர்,
இந்திய இயற்பியலாளர் மற்றும்
வானிலை ஆய்வாளர்
”அன்னா மாணி”
107 -வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 23. –
வானிலை ஆய்வாளர்
”அன்னா மாணி”
அவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார்.
அவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளைப் வெளியிட்டார்.
அன்னா மாணி பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர்.
அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை.
அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார்.
வைக்கம் சத்தியாக்கிரகம்
அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம்
ஈர்க்கப்பட்டார்.
தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டு, அவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார்.
மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும், இயற்பியல் மீது கொண்ட பற்றால் இயற்பியல் கற்க முற்பட்டார்.
சென்னை மாநிலக்கல்லூரி
1939 ல், அவர் இயற்பியல் மற்றும் வேதியியலில் மாநிலக் கல்லூரி, சென்னையில் இருந்து இளநிலை அறிவியல் கௌரவ பட்டம் பெற்றார்.
மாநிலக் கல்லூரி, சென்னையில் படிப்பை முடித்த பிறகு, அவர் பேராசிரியர் ச. வெ. இராமன் கீழ், மாணிக்கம் மற்றும் வைர ஒளியியல் பண்புகள் ஆராய்ச்சியில் வேலை செய்தார்.
அவர் ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய போதிலும், இயற்பியலில் முதுகலை பட்டம் இல்லை என்பதால், முனைவர் பட்டம் அவருக்கு மறுக்கப்பட்டது.
லண்டன் இம்பீரியல் காலேஜ்
அவர் இயற்பியல் படிப்பைத் தொடர பிரிட்டன் சென்றார் என்றாலும், அவர் இம்பீரியல் காலேஜ் லண்டனில் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் படிப்பை தேர்ந்தேடுத்தார்.
1948 ல் இந்தியா திரும்பிய பிறகு,
அவர் புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி துறையில் சேர்ந்தார்.
அவர் வளிமண்டலவியல் கருவியாக்கம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டார்.
அவர் 1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையில் முதல் துணை இயக்குனராக ஓய்வு பெற்றார்.
அவர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவை –
1980 ல் 'The Handbook for Solar Radiation data for India
மற்றும்
1981 ல். Solar Radiation over India.
அவர் 1987ல் KR ராமநாதன் பதக்கம் வென்றார்.
1994ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு,
16 ஆகஸ்ட் 2001ல் திருவனந்தபுரத்தில் காலமானார்.
--------------------------------------------.