கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி
மத்திகிரியில்
செயின்ட் சேவியர் அகடமி பள்ளி
ஆண்டு விழா கொண்டாட்டம்
தருமபுரி மறைமாவட்ட
ஆயர் பங்கேற்பு
ஓசூர். பிப்ரவரி. 12. –
செயின்ட் சேவியர் அகடமி பள்ளி
ஓசூர் மத்திகிரி செயின்ட் சேவியர்
அகடமி பள்ளி ஆண்டு விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரி நேதாஜிநகரில் செயின்ட் சேவியர் அகடமி பள்ளி இயங்கி வருகிறது.
CBSE அங்கீகாரம் பெற்றுள்ள இந்தப்பள்ளியில்
1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை
300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
தரமான கல்வி
இங்கு மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன்,
CBSE பாடத்தில் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்கும் வகையில்
கிரிக்கெட் மைதானம்,
புட்பால் மைதானம்,
வாலிபால்,
பேட்மிண்டன்,
ஸ்கேட்டிங்,
உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரமான சுற்றுச் சூழல்
இந்த விளையாட்டு திடல்களில் மாணவ, மாணவிகள் தினமும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
மேலும் செயின்ட் சேவியர் அகடமி பள்ளியை சுற்றிலும் சுகாதாரமான சுற்றுச் சூழலை பேணிக்காக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டு விழா
மத்திகிரி செயின்ட் சேவியர் அகடமி
பள்ளியின் ஆண்டுவிழா பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு கொண்டாடப்பட்டது.
ஆண்டு விழாவை
தருமபுரி
மறைமாவட்ட ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
செயின்ட் சேவியர் அகடமி பள்ளியின்
முதல்வர் அருட்பணி பெரியநாயகம் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக
பங்கேற்ற
பாஜக முன்னாள் மாவட்ட
தலைவர் நாகராஜ்
-க்கு பொன்னாடை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரிசு பொருட்கள்
விழா தொடக்கத்தில் படிப்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள்,
வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ்
மற்றும்
பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ்
மற்றும் ஆலய குருக்கள்
ஆகியோர் பங்கேற்று
மாணவ, மாணவிகளுக்கு
பதக்கங்கள்,
கோப்பைகள்,
சான்றிதழ்கள்,
உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்கள்.
டிஜிட்டல் ஒளி திரை அரங்கம்
அதைத் தொடர்ந்து வண்ணமயமான,
நவீன டிஜிட்டல் ஒளி திரையுடன் கூடிய அரங்கில், நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த கலை நிகழ்ச்சிகளில்
1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் சிறப்பாக பங்கேற்று, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
நீதிமன்றம் - நாடகம்
குறிப்பாக, நீதிமன்ற நாடக காட்சியில் நீதிபதி, வழக்கறிஞர் உடையணிந்த
மாணவ, மாணவிகள்,
திறமையாக வாதாடி, நடித்து அனைவரையும் கவர்ந்தனர்.
வண்ணத்துப்பூச்சி நடனம்
அதேபோல வண்ணத்துப்பூச்சி நடன நிகழ்ச்சியில் பள்ளி சிறுவர், சிறுமியர் ஒளிமயமான ஆடையணிந்து பட்டாம் பூச்சி பறப்பது போல துள்ளி குதித்து நடனமாடி
பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர்.
பள்ளி மேடையில் ஓடிய பேருந்து
செயின்ட் சேவியர் பள்ளி பேருந்துகளில்
மாணவர்கள் காலையிலும், மாலையிலும் பாதுகாப்புடன் பள்ளிக்கு
வந்து செல்லும் காட்சியை, டிஜிட்டல் ஒளித்திரை மேடையில்
தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட
பேருந்து மற்றும் அதன் இயக்கத்தை நாடக வடிவில் காட்சிப்படுத்திய
விதமும் பார்வையாளர்களுக்கு புதுமையாகவும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இதுபோல அனைத்து கலை நிகழ்ச்சிகளும் காண்போர் வியக்கும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
Video - no; 1 - ஆண்டு விழாவின் தொடக்கப்பாடல்.
Video - no; 2 - ஆண்டு விழாவில்
பள்ளி குழந்தைகளின்
வண்ணத்துப்பூச்சி நடனம்
Video - no; 3 - ஆண்டு விழா -
மாணவர்களின் நடனம்
Video - no; 4 - ஆண்டு விழாவில்
மேடையில் ஓடிய பள்ளி பேருந்து
இந்த விழாவில் ஓசூர் மறைவட்ட ஆலயங்களின்
பங்கு குருக்கள்,
அருட்சகோதரிகள்,
செயின்ட் சேவியர் அகடமி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் பெற்றோர்,
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
---------------------------------------------------.
படங்கள் மற்றும் வீடியோ
ஜோதி ரவிசுகுமார்.
---------------------------------.