மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில்
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின்
106-வது பிறந்த நாள் விழா
ஓசூர். நவ. 20. –
by Jothi Ravisugumar
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமையில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 106வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை யொட்டி மாவட்ட தலைவர்
எஸ்.ஏ.முரளிதரன் தலைமையில்
மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் நகர தலைவர் தியாகராஜன்,
ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் முனிராஜ்,
மாவட்ட மகளிர் பிரிவு தலைவி அந்திவாடி
சரோஜா, லலிதா, மூத்த காங்கிரஸ் தலைவர்
சிவப்பாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.