நேற்றைய வரலாறு - இன்றைய பாடம்
------------------------------------------------------------
இந்திய கடலோர காவல் படை
தனது 46 ஆண்டுகள் சேவையை
வெற்றிகரமாக நிறைவு செய்து
47-ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
பிப்ரவரி - 01 - 1978-
இந்திய கடலோர காவல்படை
47-வது நிறுவன தினம்
'இந்திய கடலோர காவல் படை,
உலகின் நான்காவது பெரிய
கடலோர காவல் படை".
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப்ரவரி. 01. –
1978-ஆம் ஆண்டு 7 தளங்களுடன் தொடங்கப்பட்ட
இந்திய கடலோர காவல் படை,
இன்று 156 கப்பல்கள் மற்றும் 62 விமானங்களுடன் ஒரு வலுவான படையாக வளர்ந்துள்ளது.
2025-ஆம் ஆண்டுக்குள் 200 தளங்கள் மற்றும் 80 விமானங்களை பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய கடலோர காவல் படை, உலகின் நான்காவது பெரிய கடலோர காவல் படை.
இது கடலோர பகுதிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
24 மணி நேர தீவிர கண்காணிப்பு
இந்திய கடலோர காவல் படை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 14,000 குற்றவாளிகளை இப்படை கைது செய்துள்ளது. சராசரியாக இரண்டு நாளைக்கு ஒருவரை கடலோரை காவல் படை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது.
50 கப்பல்கள்,
12 விமானங்கள்
தினந்தோறும் கண்காணிப்பு
கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், கடலோர காவல் படை 24 மணி நேர தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.
பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் 50 கப்பல்கள் மற்றும் 12 விமானங்கள் தினந்தோறும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
11 புயல்களின் போது,
மீட்புப்பணி
ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடவடிக்கையால் 1,500 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில், அத்துமீறி நுழைந்த 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகளுடன் 80 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட 11 புயல்களின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6,000 மீன்பிடி படகுகள், 40,000 மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் உயிரிழப்பு, பொருள் இழப்பு தவிர்க்கப்பட்டது.
3 லட்சம் மெட்ரிக் டன்
கச்சா எண்ணெய் மீட்பு
மண்டலத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற திட்டத்திற்கு ஏற்ப இந்திய கடலோர காவல் படை இலங்கை அருகே
‘நியூ டைமண்ட்’
என்ற மிகப் பெரிய எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்தது. அதில் 3 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருந்தது.
வர்த்தக கப்பல் ‘வகாசியோ’
இதன் மூலம் பெரும் சுற்றுச் சூழல் ஆபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், மொரீசியஸ் அருகே வர்த்தக கப்பல் ‘வகாசியோ’ தரைதட்டியபோது, ஏற்பட்ட மாசுவை அகற்றவும் உதவியது.
இந்திய கடலோர காவல் படை தனது 46 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் 47-ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
---------------------------------------------.