கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
ஆர்வமுடன் என்.எம்.எம்.எஸ் தேர்வில்
கலந்து கொள்ளும் 40 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கி,
வெற்றி பெற வாழ்த்திய
தலைமையாசிரியர்
ஓசூர். பிப். 21. –
பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளி
ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 8-வது வகுப்பு பயிலும் 40 மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ். தேர்வில் கலந்து கொள்ள ஹால் டிக்கெட்டுகளை தலைமையாசிரியர் பொன் நாகேஷ் வழங்கி வாழ்த்தினார்.
என்.எம்.எம்.எஸ். தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பேடரப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 900-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் படித்து வருகிறார்கள்.
இந்தப்பள்ளியில் பயிலும் 8-வது வகுப்பு மாணவர்கள்,
கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து என்.எம்.எம்.எஸ். தேர்வில் பங்கேற்று, வெற்றி பெற்று வருகின்றனர்.
ஊக்கத்தொகை
8-வது வகுப்பு பயிலும் மாணவர்கள், மத்திய அரசின் ஊக்கத்தொகையை பெறுவதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு ஊக்கத்தொகை திட்டத்தில்
(என்.எம்.எம்.எஸ்) பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
மாதம் ரூ.1000 வீதம்
4 ஆண்டுகள் ஊக்கத்தொகை
என்.எம்.எம்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றால் மாதம் ரூ.1000 வீதம் 9-வது வகுப்பு முதல்
12-வது வகுப்பு முடிக்கும் வரை 4 ஆண்டுகள் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டிற்கான தேர்வு இன்று (22.02.2025) தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
40 மாணவர்கள் பங்கேற்பு
இந்த தேர்வில் பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில் பயிலும் ஆர்வமுள்ள மாணவிகள் 21 பேரும், மாணவர்கள் 19 பேரும் என மொத்தம் 40 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாணவர்கள் ஓசூர் ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தேர்வு எழுதுகின்றனர்.
தலைமையாசிரியர்
பொன் நாகேஷ்
அதைத் தொடர்ந்து என்.எம்.எம்.எஸ் தேர்வுக்கு செல்லும் 40 மாணவ, மாணவிகளுக்கும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை (Hall ticket)
தலைமையாசிரியர் பொன்நாகேஷ் வழங்கினார்.
வெற்றி பெற வாழ்த்து
40 மாணவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று தலைமையாசிரியர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
---------------------------------------------------------.
ஓசூர் ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பிப்ரவரி 22 -ம் தேதி காலையில்
N.M.M.S. Exam - எழுத தயாராக உள்ள
பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளி - 8-வது வகுப்பு பயிலும்
40 மாணவ, மாணவிகள் -
உடன் தலைமையாசிரியர் பொன்நாகேஷ்.
மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.