கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வனக்கோட்டத்தில்
1155 கிலோ பிளாஸ்டிக் மற்றும்
இதர கழிவு பொருட்கள் அகற்றம்
ஒசூர். ஜூலை. 20. –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் வனப்பகுதியில் சாலையோரம் மற்றும்
இதரப் பகுதிகளில்
1155கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும்
இதர கழிவுப் பொருட்கள்
அகற்றப்பட்டது.
பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இது வனத்திற்கும் வனஉயிரினங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலுள்ள வனப்பகுதிகளில் காணப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மை செயலர்
உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில்
2025 ஜுலை 19 - ம் தேதி,
ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர்
திரு. பகான் ஜெகதீஷ் சுதாகர்,
அவர்கள் உத்தரவின்படி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள
காவேரி வடக்கு மற்றும் காவரி தெற்கு வனஉயிரின சரணாலயம்
மற்றும் இதர வனப்பகுதியில் செல்லும் ஓசூர் பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை,
ஒகேனக்கல் சாலை,
திருப்பத்தூர் சேலம் நெடுஞ்சாலை,
கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலை
உள்ளிட்ட முக்கிய சாலையோரமும்,
பொதுமக்கள் செல்லும் முக்கிய பகுதிகளிலும்
கோவில்கள் மற்றும் இதரப் பகுதிகளில்
காணப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது.
ஜுலை 19-ம் தேதி காலை முதல் நடந்த
இந்த பணியில்
வனப்பணியாளர்கள்,
பொதுமக்கள்,
தன்னார்வலர்கள்,
பள்ளி மாணவ, மாணவிகள்,
மலைவாழ் மற்றும் தமிழ்நாடு காடுவளர்ப்பு சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்,
தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்
உள்ளிட்ட 520க்கும் மேற்பட்ட
நபர்கள் ஈடுபட்டனர்.
1155 கிலோ கழிவுகள்
இதில் சுமார் 1155 கிலோ கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கழிவுகளை அருகிலுள்ள கழிவுகள் சுத்திகரிப்பு மையங்களில் ஒப்படைக்கப்பட்டது.
வன உயிரினங்கள் பாதிப்பு
வனத்திற்கும், வனஉயிரினங்களுக்கும் மற்றும் சுற்றுபுற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வனப்பகுதியில் வீசுவதனால்,
வனஉயிரினங்கள் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகின்றன.
எனவே,
பொதுமக்கள் யாரும் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதிக்குள் கொட்ட வேண்டாம்
என வனத்துறையின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-------------------------------------.